என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவிலில் தனியார் வங்கியில் போலி நகையை அடகு வைக்க வந்த வாலிபருக்கு தர்ம அடி
- பொதுமக்கள் கட்டி வைத்து தாக்கினர்
- புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
நாகர்கோவில்:
நாகர்கோவில் சரலூர் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் நேற்று வாலிபர் ஒருவர் நகைகளை அடகு வைக்க வந்தார். அவர்தான் வைத்திருந்த நகைகளை வங்கியில் கொடுத்து பணம் கேட்டுள்ளார்.
இதையடுத்து வங்கி ஊழியர்கள் அவர் கொடுத்த நகையை பரிசோதனை செய்து பார்த்தபோது கவரிங் நகை என தெரியவந்தது.
இதையடுத்து ஊழியர்கள் பணம் கொடுக்கவில்லை. உடனே நகை கொடுத்த வாலிபர் வங்கி ஊழியர்க ளிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
அவர்கள் வங்கி ஊழி யர்களிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.மேலும் அந்த பகுதியில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினார்கள்.பின்னர் கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
பொதுமக்கள் பிடியில் இருந்த அந்த வாலிபரை மீட்டனர். மீட்கப்பட்ட வாலிபரிடம் விசாரணை நடத்திய போது அவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. பொதுமக்கள் தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டிருந்ததையடுத்து அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சுங்கான்கடை அடுத்த களியங்காடு பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 44). இவர் பரசேரியில் தனியார் பள்ளிக்கூடம் மற்றும் நகை அடகு பிடிக்கும் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி காலை நகை அடகு பிடிக்கும் கடைக்கு வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் நகை அடகு வைக்க வேண்டும் என கூறியுள்ளார். அப்போது பணியில் இருந்த ஐஸ்வர்யா அவர் கொடுத்த சுமார் 20 கிராம் எடை கொண்ட நகையை பெற்றுக் கொண்டு ரூ.70 ஆயிரம் கொடுத்துள்ளார். பின்னர் அந்த நபரின் நடத்தையில் சந்தேகமடைந்த ஐஸ்வர்யா நகைகளை சோதனை செய்துள்ளார். அப்போது அந்த நபர் கொடுத்த நகை மற்றும் முகவரி போலி என தெரியவந்தது. இதுகுறித்து சிதம்பரம் இரணியல் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி நகைகள் வைத்து ஏமாற்றிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்