search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக சுற்றுலா தினவிழாவையொட்டி கன்னியாகுமரியில் மினி மாரத்தான் ஓட்டம்
    X

    உலக சுற்றுலா தினவிழாவையொட்டி கன்னியாகுமரியில் மினி மாரத்தான் ஓட்டம்

    • கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்பு
    • நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமை தாங்கினார்.

    கன்னியாகுமரி :

    ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 27-ந் தேதி உலக சுற்றுலா தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல இந்த ஆண்டு சுற்றுலா மற்றும் பசுமை முதலீடு என்ற தலைப்பில் இன்று நாடு முழுவதும் உலக சுற்றுலா தின விழா கொண்டா டப்பட்டது.

    குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் குமரி மாவட்ட சுற்றுலாத்துறை இணைந்து கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் உலக சுற்றுலா தின விழாவை கன்னியாகுமரி யில் இன்று கொண்டாடியது. இதையொட்டி இன்று காலை கன்னியாகுமரியில் மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது. கன்னியாகுமரி நான்கு வழி சாலை முடியும் ஜீரோ பாயிண்ட் பகுதியில் இருந்து காலை 7 மணிக்கு தொடங்கிய மினி மாரத்தான் ஓட்டத்தை குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமை தாங்கினார்.

    அகஸ்தீஸ்வரம் விவே கானந்தா கல்லூரி, விவேகானந்தா பாலி டெக்னிக் கல்லூரி, பால்குளம் ரோகிணி பொறி யியல் கல்லூரி உள்ளிட்ட 5 கல்லூரிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றனர். கன்னியா குமரி சீரோ பாயிண்ட் பகுதியில் இருந்து தொடங்கிய இந்த மினி மாரத்தான் ஓட்டம் மகாதானபுரம் 4 வழி சாலை ரவுண்டானா சந்திப்பு வரை சென்று திரும்பி மீண்டும் அதே வழியாக சீரோ பாயிண்ட் பகுதியை சென்ற டைந்தது. மொத்தம் 6 கிலோ மீட்டர் தூரம் இந்த மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது.

    தொடக்க விழா நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அகஸ்தீசன், குமரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பி ரண்டு மதியழகன், கன்னியா குமரி துணை சூப்பிரண்டு மகேஷ்குமார், குமரி மாவட்ட சுற்றுலா அலுவலர் சதீஷ்குமார், உதவி அலுவலர் கீதா ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அதன் பின்னர் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் தூய்மை பணி நடந்தது. மேயர் மகேஷ் தலைமையில் கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவி கள் கலந்து கொண்டு கடற்கரையை சுத்தம் செய்தனர்.

    விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழக படகுத்துறையில் வைத்து சுற்றுலாத் துறை சார்பில் தமிழக கலாச்சார முறைப்படி நெற்றியில் சந்தனம் குங்குமம் திலகமிட்டு சங்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு இனிப்புடன் சுற்றுலா கையேடும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    இது தவிர பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகளுக்கு இடையே சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தின விழாவை யொட்டி பேச்சு மற்றும் கட்டுரை போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி மாணவர்களின் பேரணியும் நடந்தது. ஓட்டல் மற்றும் லாட்ஜூகளில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட சுற்றுலா அதிகாரி சதீஷ்குமார் உதவி அலுவலர் கீதா ராணி ஆகியோர் செய்து இருந்த னர்.

    Next Story
    ×