search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சல் அரசு நடுநிலைப்பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்ட வேண்டும்
    X

    குளச்சல் அரசு நடுநிலைப்பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்ட வேண்டும்

    • விஜய்வசந்த் எம்.பி.யிடம் பள்ளி நிர்வாகிகள் மனு
    • எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை சுமார் 360 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி எம்.பி. விஜய்வசந்தை குளச்சல் அரசு நடுநிலைப்பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் சமீனுதீன் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    குளச்சல் அரசு நடுநி லைப்பள்ளி சுமார் 121 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். இங்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் வழி கல்வி கற்பிக்கப்படுகிறது. எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை சுமார் 360 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும் பள்ளியில் அங்கன்வாடி மையம், மாற்றுத்திறனாளி குழந்தைகள் பகல் நேர பாதுகாப்பு மையம் ஆகியவை செயல்பட்டு வருகிறது.

    ஆனால் பள்ளி குழந்தை களின் கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து உள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள வகுப்பறைகள் மழைக்காலங்களில் ஒழுகி காணப்படுகிறது. பள்ளி வளாகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை மைய பல்நோக்கு மைய கட்டிடத்தில் தற்காலிகமாக 6 முதல் 8-ம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்தப்படுகிறது. அங்கு நிரந்தரமாக வகுப்புகள் நடத்த முடியாது.

    இந்த பள்ளியில் தான் குருந்தன்கோடு வட்டார வள மையம் சார்பில் குளச்சல் வட்டார மாணவ, மாணவிகளுக்கு அரசு நடத்தும் பல்வேறு போட்டிகள் நடைபெறுவது என்பது குறிப்பிடத்தக்கது. குளச்சல் சரகத்தில் விசாலமான விளையாட்டு மைதானம் உள்ளது.

    கொரோனா தாக்குதலுக்குப்பின் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட நடுத்தர, ஏழை மக்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க அரசு பள்ளிக் கூடங்களைத்தான் நம்பி உள்ளனர். தமிழக அரசின் சிறப்பு திட்டமான ஸ்மார்ட் வகுப்பறை திட்டம் செயல்பட அனைத்து வகையிலும் இந்த பள்ளி தகுதியானது. ஆனால் கட்டிடம் ஒழுகுவதால் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த பள்ளி புதுப்பிக்கப்பட்டால் ஏழை பெற்றோர்கள் பிள்ளைகளை இங்கு சேர்ப்பர். பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையும் அதிகரிக்கும். எனவே தாங்கள் தொகுதி மேம்பாடு நிதியிலிருந்து பள்ளிக்கு 12 வகுப்பறை கட்டிடம் கட்டி தருமாறு ஏழை பெற்றோர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×