என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விவேகானந்தர் மண்டபத்துக்கு இரவிலும் படகு போக்குவரத்து
- சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் இயக்கப்பட்டது
- கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கு தினமும் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஓணம் பண்டிகை விடுமுறை என்பதால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் 2 மணி நேரத்துக்கு மேலாக வரிசையில் காத்து நின்று படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.
நேற்று சனிக்கிழமை விடுமுறை என்பதால் வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக நேற்று காலை 8 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு தொடங்கியது.
இருப்பினும் வழக்கம்போல் மாலை 4 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்துநிறுத்தப்பட்டது. ஆனால் அதே சமயம் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்த சுற்றுலாபயணிகளை இரவு 7 மணி வரை படகுமூலம் கரைக்கு திரும்பி அழைத்து வந்தனர். இரவில் மின்விளக்குவெளிச்சத்தில் இந்த படகுகள் இயக்கபட்டன. இரவிலும் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து கரைக்கு சுற்றுலா பயணிகள் திரும்பி வருவதற்கு படகு போக்குவரத்து இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் படகில் அச்சத்துடன் பயணம் செய்து கரை திரும்பினர்.
பவுர்ணமியையொட்டி நேற்று இரவு குமரி கடல் திடீரென உள்வாங்கி காணப்பட்டது. இதனால் கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன. இன்று காலை 10 மணிக்கு தான் கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதன் காரணமாக விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிட காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து காலை 10 மணிக்கு பிறகு தொடங்கியது. இதனால் படகு போக்குவரத்து சுமார் 2 மணி நேரம் தாமதமாக போக்குவரத்து தொடங்கியது.