என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![பூதப்பாண்டி அருகே வட மாநில தொழிலாளி மர்ம சாவு பூதப்பாண்டி அருகே வட மாநில தொழிலாளி மர்ம சாவு](https://media.maalaimalar.com/h-upload/2022/08/22/1749996-death1.jpg)
பூதப்பாண்டி அருகே வட மாநில தொழிலாளி மர்ம சாவு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பேரிடம் விசாரணை
- பிணமாக கிடந்தவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற விவரம் பிரேத பரிசோதனையில் தான் தெரியவரும்.
நாகர்கோவில்:
ஆரல்வாய்மொழி, செண்பகராமன் புதூர் பகுதியில் ஏராளமான செங்கல் சூளை உள்ளது.இங்கு வட மாநில தொழிலா ளர்கள் ஏராளமானோர் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.
திடல் பகுதியில் உள்ள செங்கல்சூளை ஒன்றில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அவர்கள் ஒன்றாக மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கைகலப்பும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 26 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மர்மமான முறை யில் இறந்து கிடந்தார். இது பற்றி பூதப்பாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று விசா ரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்தவர் உடலில் சில காயங்கள் இருந்தது.
எனவே அவர் சாவில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்த வாலிப ரடன் தங்கி இருந்தே 10 வட மாநில தொழிலாளர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.பிணமாக கிடந்தவர் கொலை செய்யப் பட்டாரா? என்ற விவரம் பிரேத பரிசோதனையில் தான் தெரியவரும்.
இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.