search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணா பஸ் நிலையத்தில் மூடி கிடந்த புறக்காவல் நிலையம் திறப்பு
    X

    அண்ணா பஸ் நிலையத்தில் திறக்கப்பட்டிருக்கும்  புறக்காவல் நிலையத்தை படத்தில் காணலாம்

    அண்ணா பஸ் நிலையத்தில் மூடி கிடந்த புறக்காவல் நிலையம் திறப்பு

    • 2 ஷிப்டுகளாக கண்காணிக்க ஏற்பாடு
    • 'மாலைமலர்' செய்தி எதிரொலி

    நாகர்கோவில்:

    தீபாவளி பண்டிகை நெருங்குவதையடுத்து கடைவீதிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.

    நாகர்கோவில் செம்மங் குடி ரோடு, மீனாட்சி புரம், வடசேரி, கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதி களில் உள்ள கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையத்திலும் பஸ்கள் ஏறுவதற்கு கூட்டம் அதிக மாக காணப்படுகிறது.பஸ்களில் பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறி வருகிறார்கள்.

    கூட்ட நெரிசலை பயன்ப டுத்தி பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் தீவிர கண் காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம் கடந்த சில நாட்களாக மூடி கிடந்தது.

    தற்பொழுது கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள தால் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்று மாலைமலரில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் புறக்காவல் நிலை யத்தை திறக்க உத்தரவிட்டார்.

    மேலும் புற காவல் நிலையத்தில் இரண்டு ஷிப்டுகளாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் அவர் உத்தர விட்டுள்ளார். ஒரு ஷிப்ட்டுக்கு 2 பெண் போலீசார், 2 ஆண் போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படு கிறார்கள். தீபாவளி பண்டிகைைய யொட்டி கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் ஆயுதப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.இன்று காலை முதல் புறக்காவல் நிலையம் திறந்து செயல்பட்டது. புறக்காவல் நிலையத்தில் இருந்த போலீசார் பஸ் நிலையங்களில் உள்ள பிளாட்பாரங்களில் ரோந்து சுற்றி வந்தனர்.

    பஸ் நிலையத்தில் உள்ள ஒரு சில சி.சி.டி.வி. கேமிராக்கள் மட்டுமே தற்பொழுது செயல் பட்டு வருகிறது. செயல்படா மல் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களையும் சரி செய்து கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

    Next Story
    ×