என் மலர்
உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா பாக்கும்படி நிகழ்ச்சி
- திரளான பங்கு மக்கள் பங்கேற்பு
- பாக்கும்படி நிகழ்ச்சி முடிந்ததும் கொடிமர கம்பம் பங்கு மக்களால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திருத்தலத்தில் வைக்கப்பட்டது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் அமைந்து உள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் குமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் மிகவும் புகழ்பெற்றது ஆகும். இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருவிழா அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா 18-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர், ஜெபமாலை, விசேஷ மாலை ஆராதனை மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
8-ம் திருவிழாவான 16-ந்தேதி இரவு சப்பர பவனியும், 9-ம் திருவிழாவான 17-ந்தேதி இரவு சூசையப்பர் தங்கத்தேர் பவனியும், 10-ம் திருவிழாவான 18-ந்தேதி காலையில் மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனியும் நடக்கிறது.
திருவிழாவையொட்டி நடக்கும் நாதஸ்வரம், பேண்ட் வாத்திய இசை, ஒலி-ஒளி அமைப்பு, கோவில் மின்விளக்கு அலங்காரம், தேர்அலங்காரம், வான வேடிக்கை, மெல்லிசைக் கச்சேரி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பங்கு மக்கள் முன்னிலையில் வெற்றிலை பாக்குடன் முன் பணம் கொடுக்கும் "பாக்கும்படி" நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் ஆன்றனி அல்காந்தர், தலைமை தாங்கினார். பங்குப்பேரவை துணைத்தலைவர் ஜோசப், செயலாளர் சுமன், பொருளாளர் தீபக், துணை செயலாளர் பினோ, இணை பங்கு தந்தையர்கள் சேவியர்அருள்நாதன், மேக்சன், ஜாண்போஸ்கோ, ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதலில் தேர் அலங்காரத்துக்கான முன்பணம் செல்வம் என்பவ ருக்கு வழங்கப்பட்டது. இதில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
பாக்கும்படி நிகழ்ச்சி முடிந்ததும் கொடிமர கம்பம் பங்கு மக்களால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திருத்தலத்தில் வைக்கப்பட்டது. அதன் பிறகு மாதா தேர் மற்றும் சூசையப்பர் தேர் ஆகிய இரண்டு தேர்களும் பவனிக்கு தயார்படுத்துவதற்காக தேர் கூடத்தில்இருந்து பங்கு மக்களால் இழுத்து வெளியே கொண்டு விடப்பட்டது.