என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நாளை பரணி கொடைவிழா
- நள்ளிரவு வலிய படுக்கை பூஜை நடக்கிறது.
- குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்க ளில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இக் கோவிலில் இந்த ஆண்டு மாசி பெருந்திருவிழா கடந்த 5-ந் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி 14 ந் தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது.
விழாவில் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநில ங்களில் இருந்து அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் புனித தீர்த்தமாடி நேர்ச்சை கடன் செலுத்தி பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.
இதைத்தொடர்ந்து 8-ம் கொடை விழா கடந்த 21 ந் தேதி நடந்தது. 25-ந் தேதி (சனிக்கிழமை) அம்மனின் பிறந்த நாளாக பக்தர்களால் கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று பரணிக் கொடைவிழா நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் திருநடை திறக்கப்பட்டு பஞ்சாபி ஷேகம், உஷபூஜை, உருள் நேர்ச்சை, பூமாலை நேர்ச்சை, உச்சகால பூஜை, குத்தியோட்டம், தொடர்ந்து மாலையில் தங்கரதம் உலாவருதல், திருவிளக்கு பூஜை, அலங்கார தீபாராதனை, அத்தாழபூஜை, வெள்ளிப்பல்லக்கில் அம்மன் பவனி நடக்கிறது.
நள்ளிரவு 12 மணிக்கு வலியபடுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது. இப்பூஜை மாசிக்கொடை விழாவின் ஆறாம் நாளான வெள்ளிக்கிழமை, பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று நடக்கும் பரணிக்கொடை விழாவான நாளை (சனிக்கிழமை) மற்றும் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என வருடத்தில் 3 தடவை நடக்கிறது. பூஜையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
விழாவில் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து கோவிலிலும் சுற்றுப்புற பகுதிகளிலும் பொங்கலிட்டு வழிபடுவார்கள். விழாவை முன்னிட்டு முக்கிய இடங்களில் இருந்து மண்டைக்காட்டிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக் கொடைவிழாவில் பக்தர் கள் காணிக்கை செலுத்து வதற்காக கோவிலின் முன்பு வைக்கப் பட்டிருந்த திறந்த வார்ப்பு குமரி மாவட்ட திருக்கோ வில்களின் இணை ஆணையர் ஞானசேகர், உதவி ஆணையர் தங்கம், பத்மனாபபுரம் தேவஸ்வம் தொகுதி கண்காணிப்பாளர் ஆனந்த், ஆய்வாளர் செல்வி, கோவில் ஸ்ரீகாரியம் செந்தில்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள், சுயஉதவிக்குழு பெண் கள், பொதுமக்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. அதில் ரூ.3,87,205 ரொக்கமாக கிடைக்கப்பெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்