search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெளி மாநிலங்களில் இருந்து வரும் பார்சல்களை பரிசோதனைக்கு பிறகே ஒப்படைக்க வேண்டும்
    X

    வெளி மாநிலங்களில் இருந்து வரும் பார்சல்களை பரிசோதனைக்கு பிறகே ஒப்படைக்க வேண்டும்

    • கொரியர் நிறுவனங்களுக்கு எஸ்.பி. வேண்டுகோள்
    • கஞ்சா, குட்கா உள்ளிட்டபோதை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்டபோதை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் கஞ்சா விற்பனையை தடுக்க பல் வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கஞ்சா விற்பனை தொடர்பாக கைது செய்யப்படும் நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு, அவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது? சப்ளையர் யார்? என்பது தொடர்பாக விசாரிக்கப் பட்டு தொடர் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீப காலமாக கொரியர் சர்வீஸ் மூலமும், பார்சல் சர்வீஸ் சென்டர்கள் மூலமும் கஞ்சா வருவதாக காவல் துறைக்கு தகவல் வந்தது. அதன் பேரில் கொரியர் அலுவலகங்களில் எஸ்.பி., நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

    இந்நிலையில் நேற்று மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில், பார்சல் சர்வீஸ் மற்றும் கொரியர் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பேசுகையில், போலீசார் மட்டும் கஞ்சா விற்பனையை தடுக்க முடி யாது. பொதுமக்கள், வியாபாரிகள் உள்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தற்போது போலீசார் சோதனை தீவிரமாகி உள்ளதால் வெளிமாநிலங்களில் இருந்து கொரியரில் கஞ்சா, புகையிலை பொருட்கள் வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

    எனவே கஞ்சா விற்பனை பற்றி தகவல் தெரிந்தால் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ள 7010363173 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கொரியரில் பார்சல் அனுப்ப வருபவர்கள், பார்சலை பெற வருபர்வர்களிடம் எதாவது ஒரு ஆவண நகல் (ஆதார், ஓட்டுநர் உரிமம்) வாங்கி கொண்டு பார்சலை பெற்று கொள்ளுங்கள்.

    வெளி மாநிலங்களில் இருந்து வரும் பார்சல்களை நன்கு கண்காணித்து அதில் கஞ்சா மற்றும் வேறு ஏதேனும் போதை பொருட்கள் உள்ளதா? என்பதை பரிசோதித்து உரியவரிடம் வழங்க வேண்டும். பார்சல்களில் இருக்கும் முகவரி போலியான முகவரியாக இருந்தாலோ, மேலும் சந்தேகத்திற்கு இடமாக ஏதேனும் பார்சல்கள் இருந்தாலோ. உடனே அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×