search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜீவா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
    X

    ஜீவா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

    • பொதுவுடமை வீரர் ஜீவா பிறந்த நாள் விழா
    • அமைச்சர் மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்பு

    நாகர்கோவில் :

    பொதுவுடமை வீரர் ஜீவா பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து வேப்பமூட்டில் உள்ள அவரது சிலைக்கு மாவட்டம் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் ஸ்ரீதர், மேயர் மகேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் துணை மேயர் மேரி பிரின்சிலதா, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம், மாநகராட்சி மண்டல தலைவர் ஜவகர், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜான் ஜெகத் பிரைட் உள்பட கலந்து கொண்டனர். இதைத்தொ டர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

    குமரி மாவட்டத்தில் உரிமை களுக்காக போராடிய பல தலைவர்கள் வாழ்ந்து ள்ளனர். இதில் ஒருவராக திகழ்ந்தவர் தான் பொது வுடமை வீரர் ஜீவா. ஏழை, எளிய மக்களுக்காக வாழ்ந்தார். அவருடைய எழுத்துக்களாலும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளார். தமிழக அரசு கடந்த 2½ ஆண்டுகளில் குமரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண் டுள்ளது.

    சுற்றுலாத்துறை இந்து சமய அறநிலைத்துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மாவட்டம் முழுவதும் ரூ.200 கோடிக்கு சாலை பணிகள் மேற்கொ ள்ளப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி யிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக பஸ் நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஆரம்ப சுகாதார நிலை யங்கள், வகுப்பறை கட்டிடங்கள் இதுவரை இல்லாத அளவிற்கு கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆளுநரை பொறுத்தமட்டில் மக்களால் தேர்ந்தெ டுக்கப்பட்ட அரசை மதிக்க தெரிந்து கொள்ள வேண்டும். ஆளுநர் எல்லை மீறி செயல்படுகிறார். நீட் தேர்வால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படு வார்கள் என்பதற்காக தி.மு.க. அரசு இதை எதிர்த்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி வட இந்தி யாவிலும் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை திரும்ப பெற வேண்டும் என்பதற்காக தான் தி.மு.க. போராடி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் விஜய் வசந்த் எம்.பி. ஜீவா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் ராதா கிருஷ்ணன், நாகர்கோவில் மாநகராட்சி காங்கிரஸ் மண்டல தலைவர்கள், சிவபிரபு, செல்வன், கவுன்சிலர்கள் பால்அகியா, அனிஷா பிரைட், இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் சகாய பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அந்தோணி, அகமது உசேன், மாநகர செயலாளர் மோகன், மாநகர் குழு உறுப்பினர் நாகராஜன் மற்றும் நிர்வாகி கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    Next Story
    ×