என் மலர்
உள்ளூர் செய்திகள்
குமரியில் மழை நீடிப்பு - கொட்டாரத்தில் 70.4 மி.மீ. பதிவு - ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
- குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வந்த நிலையில் நேற்று இரவு மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது
- கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் :
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 6-ந்தேதி உருவாகிறது. இதனால் தமிழகத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித் துள்ளது.
குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வந்த நிலையில் நேற்று இரவு மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இன்று காலையிலும் மழை பெய்து கொண்டே இருக்கிறது.கன்னியாகுமரி கொட்டாரம் மயிலாடி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.
கொட்டாரம் பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிக பட்சமாக 70.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அங்கு தொடர்ந்து பெய்து வந்த மழையினால் மின்னல் தாக்கி பெருமாள்புரம் வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன் கோவில் கோபுர கலசம் ஒன்று உடைந்து கீழே விழுந்தது.
நாகர்கோவிலில் இன்று காலை முதலே வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய் தது. இதனால் ரோடு களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இரணியல், ஆரல் வாய்மொழி, கோழிப் போர்விளை, அடையா மடை, குருந்தன்கோடு, முள்ளங்கினாவிளை, ஆணைக்கிடங்கு உட்பட அனைத்து பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது.
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதையடுத்து பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து 3000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைகளில் இருந்து உபரிநீர் வெளி யேற்றப்படுவதால் கோதை ஆறு, குழித்துறை ஆறு, தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணி கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மாவட்டம் முழுவதும் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை-52.2, பெருஞ்சாணி-57.2, சிற்றார்-1-28.4, சிற்றார்- 2-43.8, பூதப்பாண்டி-10.4, களியல்-43.7, கன்னிமார்- 9.2, கொட்டாரம்-70.4, குழித்துறை-34, மயிலாடி- 32.2, நாகர்கோவில்-2, சுருளோடு-28, தக்கலை-39.2, இரணியல்-4.6, பால மோர்-10.2, மாம்பழத்துறை யாறு-6.33, திற்பரப்பு- 47.4 ஆரல்வாய்மொழி- 2.2, கோழிப்போர்விளை- 18, அடையாமடை-29.4, குருந்தன்கோடு-2.8, முள்ளங்கினாவிளை- 12.6, ஆணைக்கிடங்கு-34.
பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 42.38 அடியாக உள்ளது. அணைக்கு 1175 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 1016 கனஅடி உபரி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.07 அடியாக உள்ளது. அணைக்கு 1112 கனஅடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.அணை யில் இருந்து 1872 கன அடி தண்ணீர் வெளியேற் றப்படுகிறது.
சிற்றார்-1 அணை நீர்மட்டம் 13.61 அடியாக வும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 13.71 அடியா கவும், பொய்கை நீர்மட் டம் 16 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு நீர்மட்டம் 39.62 அடியாகவும், முக்கடல் நீர்மட்டம் 13.4 அடியாகவும் உள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பாசன குளங்களும் நிரம்பி வருகிறது. விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
மாவட்டம் முழுவதும் செங்கல் உற்பத்தி ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட் டுள்ளது. ஏராளமான தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள். செங்கல் உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளதையடுத்து செங்கல் விலை சற்று உயர்ந்துள்ளது.