என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் ஆதார் மைய ஊழியர்கள் திடீர் போராட்டம்
    X

    அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் ஆதார் மைய ஊழியர்கள் திடீர் போராட்டம்

    • பணியாற்றக்கூடிய பெண்களுக்கு கடந்த இரு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை
    • பொதுமக்கள் பதிவுகள் மேற்கொள்ள முடியாமல் ஏமாற்றம்

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகம் அருகே ஆதார் மையம் செயல்படுகிறது.

    இங்கு தனியார் நிறுவனத்தின் சார்பில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகிறார்கள். தினமும் ஏராள மானவர்களுக்கு ஆதார் பதிவு, முகவரி திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு பணியாற்றக்கூடிய பெண்களுக்கு கடந்த இரு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதன் காரணமாக இன்றைய தினம் இந்த ஆதார் மையத்தை திறக்காமல் ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் ஆதார் மையத்திற்கு வந்த பொதுமக்கள் பதிவுகள் மேற்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    இது குறித்து அறிந்ததும் தாசில்தார் சேகர் , கிராம நிர்வாக அதிகாரி மோகன் ஆகியோர் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். கலெக்டர் கவனத்திற்கு இந்த பிரச்சினை கொண்டு செல்லப்பட்டு ஊழியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகா ரிகள் உறுதி அளித்தனர்.

    இதே போல் தோவாளை, கல்குளம், விளவங்கோடு, கிள்ளியூர், திருவட்டாறு தாலுகா அலுவலகங்களில் உள்ள ஆதார் மைய பணியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×