என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![திருவட்டார் அருகே விபச்சார வழக்கில் கைதான ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் நாகர்கோவில் ஜெயிலில் அடைப்பு திருவட்டார் அருகே விபச்சார வழக்கில் கைதான ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் நாகர்கோவில் ஜெயிலில் அடைப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/06/20/1901367-1.webp)
திருவட்டார் அருகே விபச்சார வழக்கில் கைதான ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் நாகர்கோவில் ஜெயிலில் அடைப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 2 அழகிகள் காப்பகத்தில் ஒப்படைப்பு
- சொந்த தேவைக்கு என வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து விபச்சாரத்தில் பெண்களை ஈடுபடுத்தியது தெரியவந்தது.
கன்னியாகுமரி :
திருவட்டார் அருகே முளகுமூடு நிங்காரவிளை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்ப தாக திருவட்டார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ் பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வீட்டில் அரைகுறை ஆடையுடன் 2 பெண்களும் ஒரு ஆணும் இருந்தனர். போலீசார் அவர்கள் 3 பேரிடமும் விசாரணை நடத்தினார்கள். அப்போது பிடிபட்டவர் தக்கலை அப்பட்டுவிளையை சேர்ந்த ரவீந்திரன் (வயது 61) என்பது தெரியவந்தது.
போக்குவரத்து கழகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற இவர் நிங்காரவிளை பகுதியில் தன்னுடைய சொந்த தேவைக்கு என வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து விபச்சாரத்தில் பெண்களை ஈடுபடுத்தியது தெரியவந்தது.
மீட்கப்பட்ட 2 பெண்களிடம் விசாரணை நடத்திய போது ஒருவர் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், மற்றொருவர் சென்னையை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இருவரையும் போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். ரவீந்திரன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய் யப்பட்ட ரவீந்திரன் கோர்ட் டில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
விபச்சார கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்ட ரவீந்திரன் வீட்டை சொந்த தேவைக்கு என்று எடுத்துள்ளார். இங்கு 2 பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டுள் ளார்.
அடிக்கடி இந்த வீட்டிற்கு ஆட்கள் வந்து சென்றதால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வாலிபர்களை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு வரவழைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.