search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பதிசாரம் ஆராய்ச்சி மையத்தில் விதை நெல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
    X

    திருப்பதிசாரம் ஆராய்ச்சி மையத்தில் விதை நெல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.அறிக்கை
    • 15 ஏக்கர் இருபோக நஞ்சை நிலத்தை அதிகாரிகள் கன்னிப்பூ சாகுபடியில் தரிசாக போட்டுள்ளனர்.

    நாகர்கோவில் :

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டசபை தொகுதி உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் விவசாயிகள் நலனுக்காக திருப்பதிசாரம் அரசு நெல் ஆராய்ச்சி விதைப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி மையம் வாயிலாக நெல் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விவசாய பண்ணையின் கீழ் 40 ஏக்கர் பாசன நிலம் உள்ளது. இதில் நடப்பாணடில் 23 ஏக்கர் நிலத்தில் மட்டுமே விதைகள் உற்பத்தி செய்ய நெல் பயிரிடப்பட்டது. மீதமுள்ள 15 ஏக்கர் இருபோக நஞ்சை நிலத்தை அதிகாரிகள் கன்னிப்பூ சாகுபடியில் தரிசாக போட்டுள்ளனர்.

    இது அதிர்ச்சியையும், விவசாயிகளுக்கு இழப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால் விதை நெல் வாங்க வருகின்ற விவசாயிகளுக்கு விதைகள் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    விவசாயிகள் விவசாயத்திற்கு தேவையான விதைகளை தாங்களே உற்பத்தி செய்யும்போது காப்பீடு பெறுவதற்கு தேவையான தர சான்றிதழ்கள் பெற காலதாமதம் ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    மாதந்தோறும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் விவசாயிகளை அழைத்து கூட்டம் நடத்தி விவசாய நிலங்களை தரிசாக போடக்கூடாது என்றும், உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள். ஆலோசனைகள் வழங்குகின்ற அலுவலர்கள் தற்போது விவசாயிகளுக்கு விதைகள் வழங்க முடியாத அவலநிலையை ஏற்படுத்தி உள்ளனர். இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து விதை நெல் தட்டுப்பாடு ஏற்படாத நிலையை உருவாக்கி விவசாயிகளை பாதுகாக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×