search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் அதிக பாரம் ஏற்றி சென்ற வாகனங்களிடம் இருந்து ரூ.17.99 லட்சம் அபராதம் வசூல்
    X

    குமரி மாவட்டத்தில் அதிக பாரம் ஏற்றி சென்ற வாகனங்களிடம் இருந்து ரூ.17.99 லட்சம் அபராதம் வசூல்

    • உரிய அனுமதி சீட்டு இல்லாமல் சட்ட விரோத மாக கனிமங்கள் எடுத்துச் செல்வதை தடுக்க வேண்டும்
    • திடீர் தணிக்கை மற்றும் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக சிறு கூட்டரங்கில் அதிக அளவில் கனிமங்கள் ஏற்றி வரும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது.

    மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்திற்கு பின் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உரிய அனுமதி சீட்டு இல்லாமல் சட்ட விரோதமாக கனிமங்கள் எடுத்துச் செல்வதை தடுப்பதற்கும், அனுமதிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாக அதிக பாரம் கனிமங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களை சோதனை செய்து நடவடிக்கை எடுப்பதற்காகவும் தனி தாசில்தார் தலைமையிலான 7 சிறப்பு குழுவினர்கள், காவல் துறையினர் மற்றும் மதுரை மண்டல பறக்கும் படையினரால் திடீர் தணிக்கை மற்றும் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி மாவட் டத்தில் கடந்த 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை உரிய அனுமதி சிட்டு இல்லாமல் சட்ட விரோதமாக கனிமங்கள் எடுத்துச் சென்றதாக 12 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    அனுமதிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாக பாரம் ஏற்றிச்சென்ற 49 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வாகனங்களின் உரிமையாளர்கள் மீது அபராதம் ரூ.17 லட்சத்து 99 ஆயிரத்து 920 விதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் இளைய ராஜா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், துணை இயக்குநர் (கனிமம்) தங்க முனியசாமி, உசூர் மேலாளர் சுப்பிரமணியம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×