search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வின்ஸ் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
    X

    வின்ஸ் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு

    • மாணவர்கள் சிறந்த நிர்வாகியாக ஆளுமை பண்புகளை மேம்படுத்த வேண்டும்
    • சி.எஸ்.ஐ.ஆர். விஞ்ஞானி ஸ்ரீ பிரவீன் ராஜ் பேச்சு

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சுங்கான்கடை அருகே அமைந்துள்ள வின்ஸ் பொறியியல் கல்லூரியில் முதுநிலை வணிக மேலாண்மை துறையினரின் "வி- உற்ஸவம் 2K23" நடைபெற்றது. கல்லூரியின் நிறுவனரும் முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாணவி பெர்வின் மனோ வரவேற்று பேசினார். முதல்வர் டாக்டர் டயானா க்றிஸ்டில்ட்டா தொடக்க உரையாற்றினார்.

    இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் அமைச்சகத்தின் விஞ்ஞானி ஸ்ரீ பிரவீன் ராஜ் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் பேசுகையில், மாணவர்கள் எல்லாம் தலைவர்கள் ஆக வேண்டும். அதற்கு அவர்கள் தங்களுடைய ஆளுமை பண்புகளை மேம்படுத்த வேண்டும். ஒரு சிறந்த நிர்வாகியாக ஒரு சிறந்த தலைவனாக விரும்புகிறவர் தம்முடைய ஆளுமை அதிகாரத்தை பயன்படுத்துவதை விட பிற மனங்களை வசீகரித்து செயல்படுபவராக, செயல்படுத்தும் ஆற்றல் படைத்தவராக இருப்பது அவசியம் என்றார்.

    விழாவில் 15 கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பொருட்களை விளம்பரப்படுத்துதல், புதிதாக ஒரு பொருளை அறிமுகம் செய்தல், கருத்து விளக்க காட்சி, நடனம் ஆகிய போட்டிகள் இடம்பெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×