search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோட்டார் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் விற்ற கடைக்கு சீல்; 2 கடைகளுக்கு அபராதம்
    X

    கோட்டார் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் விற்ற கடைக்கு சீல்; 2 கடைகளுக்கு அபராதம்

    • ஒரு கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    • தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்ற கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோட்டார் பகுதியில் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதாக வந்த தகவலை தொடர்ந்து சுகாதார அதிகாரி ராஜ்குமார், சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் ஆகியோர் இன்று காலை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்குள்ள ஒரு கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் கடையில் இருந்த பிளாஸ்டிக் பொருட்களையும் அதிகாரி கள் பறிமுதல் செய்த னர். இதுபோல மற்றொரு கடையில் அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது அங்கும் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது. இதைத் தொடர்ந்து அந்த கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 கடைகளிலும் ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதுபோல அந்த பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்ற கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    Next Story
    ×