என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கொட்டாரம் பெருமாள்புரத்தில் ரூ.4½ கோடியில் இலங்கை அகதிகள் மறுவாழ்வு மைய கட்டிடம் : அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டினார்
- முகாம்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட் டவர்கள் வசித்து வருகிறார் கள்.
- முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர்கள் தங்களுக்கு வீடுகள் கட்டிதர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் கொட்டாரம் பெருமாள்பு ரம், பழவிளை, ஞாரான்விளை, கோழிபோர் விளை ஆகிய 4 இடங்களில் இலங்கை தமிழர்கள் மறு வாழ்வு முகாம் உள்ளது. இந்த முகாம்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட் டவர்கள் வசித்து வருகிறார்கள்.
இதில் கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பெருமாள்புரம், பழவிளை ஆகிய இடங்களில் உள்ள முகாம்களில் தங்கி இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு போதிய குடியிருப்பு வசதி கள் இல்லாததால் பெரும் அவதிப்பட்டு வந்த
னர். இதைத்தொடர்ந்து இந்த முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர்கள் தங்களுக்கு வீடுகள் கட்டிதர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று முதல் கட்டமாக கொட்டாரம் பெருமாள் புரத்தில் உள்ள முகாமில் ரூ.4 கோடியே 64 லட்சம் செலவில் 80 வீடு களும், பழவிளையில் ரூ.4 கோடியே 14 லட்சம் செலவில் 72 வீடுகளும் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய் துள்ளது.
இதைத்தொடர்ந்து கொட்டாரம் பெரு மாள்புரத்தில் இலங்கை தமிழர்களுக்கு 80 புதிய வீடுகள் கட்டுவதற்கான பணி தொடக்க விழா இன்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட வுள்ள இலங்கை தமிழர்களுக் கான புதிய வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களி டம் கூறியதாவது:-
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகா பகுதியில் உள்ள பெருமாள்புரத்திலும், ராஜாக்கமங்கலம் ஒன்றிய பகுதியிலுள்ள பழ விளையிலும் இலங்கை வாழ் மக்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் 152 வீடுகள் ரூ.9 கோடியில் கட்ட தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் 152 குடும்பங்கள் பயன்படும் பயன்பெறுகிறது.
இலங்கை அகதிகள் அவரது சொந்த ஊருக்கு செல்வது தொடர்பாக விருப்பம் தெரிவித்து வருகின்றனர். விருப்பம் தெரி விப்பவர்கள் அயல்நாட்டு தமிழர் வாழ்துறை மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். அகதிகள் முகாம்களில் வளர்ச்சி பணிகளை தமிழக அரசு செய்து வருகிறது. உட் கட்டமைப்புகளும் செய்து வருவதால் அங்கு உள்ள அகதிகள் முகாம்கள் திருப்தி கரமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறி னார்.
இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, தி.மு.க. வர்த்தக அணி மாநில இணை செயலாளர் வக்கீல் தாமரைபாரதி, கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்