search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் இன்று ஸ்ரீ ராமானுஜ சாம்ராஜ்ய மகோத்சவம் நிகழ்ச்சி - தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தொடங்கி வைத்தார்
    X

    கன்னியாகுமரியில் இன்று ஸ்ரீ ராமானுஜ சாம்ராஜ்ய மகோத்சவம் நிகழ்ச்சி - தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தொடங்கி வைத்தார்

    • இன்று காலை 10 மணிக்கு நடந்தது. தமிழக கவர்னர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்
    • சிலையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்து சிறப்புரைஆற்றுகிறார்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள சபா மண்டபத்தில் ஸ்ரீ ராமானுஜ சாம்ராஜ்ய மகோத்சவம் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது.

    இந்த நிகழ்ச்சியின் தொடக்கவிழா இன்று காலை 10 மணிக்கு நடந்தது. தமிழக கவர்னர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மேல்கோட்டை ஸ்ரீயதுகிரி யதிராஜமடம் 41-வது பட்டம் பீடாதிபதிஸ்ரீ ஸ்ரீயதுகிரியதி ராஜ நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகள் தலைமை தாங்கினார்.

    இதில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

    மாலை 6 மணிக்கு சுவாமி ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் பகவத் ராமானுஜர் நாட்டிய நாடக நிகழ்ச்சி நடக்கிறது. 2-வது நாளான நாளை (25 -ந்தேதி) காலையில் ராமானுஜர் மாநாடு நடக்கி றது.

    இதையொட்டி காலை 7.30 மணிக்கு ப்ரதிஷ்டாபனஹோமம், ராமானுஜநூற்றந்தாதி பாராயணம் போன்றவை நடக்கிறது. பின்னர் காலை 9 மணிக்கு பூர்ணாஹூதி, யும்10மணிக்கு ஜீயர்சுவாமிகளால்ராமானுஜாசார்யாரு க்கு புஷ்பாஞ்சலி யும் 10.30 மணிக்கு ஜீயர் சுவாமிகளின் அருளுரையும் 11.15 மணிக்கு ஜீயர் சுவாமி களை கவுரவிக்கும்நிகழ்ச்சியும் நடக்கிறது. பகல் 12மணிக்கு விவேகானந்தா கேந்திராவில் நிறுவப்பட்டு உள்ள ராமானுஜர் சிலை திறப்பு விழா நடக்கிறது.

    இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்து சிறப்புரைஆற்றுகிறார். தொடர்ந்து யதுகிரி யதிராஜ நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகளின் அருள் உரையும் பிரசாத விநியோகமும் நடக்கிறது.

    Next Story
    ×