என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய திருவிழா - நாளை தொடங்குகிறது
- மாலை 7 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி, இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம் போன்றவை நடக்கிறது.
- இரவு 7 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருப்பலி, இரவு 9.30 மணிக்கு தேர்ப் பவனி ஆகியவை நடை பெறும்.
கன்னியாகுமரி :
திங்கள்சந்தை அருகே உள்ள கண்டன்விளையில் குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 99-வது ஆண்டு பங்கு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. நாளை காலை 6.30 மணிக்கு முன்னோர் நினைவு திருப்பலி, 7.30 மணிக்கு கல்லறைத் தோட்டம் அர்ச்சிப்பு, மாலை 5 மணிக்கு கொடி பவனி, 6.30 மணிக்கு ஜெப மாலை, புகழ்மாலை, மாலை 7 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி, இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம் போன்றவை நடக்கிறது.
நாளை மறுநாள் காலை 6.30 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி போன்றவை நடைபெறும். 2-ந்தேதி காலை 7 மணிக்கு நாஞ்சில் பால் பதனிடும் நிலைய மேலாண்மை இயக்குனர் அருட்பணியாளர் ெஜரால்டு ஜெஸ்டின் தலைமையில் மறைக்கல்வி மன்ற சிறப்புத் திருப்பலி நடக்கிறது.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஜெபமாலை, புகழ் மாலை, திருப்பலி, பொதுக்கூட்டம் போன்றவை நடக்கிறது. 8-ந்தேதி காலை 6.30 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, இரவு 7 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருப்பலி, இரவு 9.30 மணிக்கு தேர்ப் பவனி ஆகியவை நடை பெறும்.
விழாவின் இறுதி நாளான 9-ந்தேதி காலை 5.30 மணிக்கு திருப்பலி, காலை 8 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் அந்தோணி சாமி தலைமையில் திருவிழா திருப்பலி, 10 மணிக்கு மலை யாளத்திருப்பலி, 11.30 மணிக்கு தேர்ப்பவனி, மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர், இரவு 7 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை வெ.சகாயஜஸ் டஸ், இணைப் பங்குதந்தை ரா.சத்தியநாதன், பங்கு இறை மக்கள், அருட்பணிப் பேர வையினர் செய்து வருகின்றனர்.