என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குமரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரப்பர் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
- ரப்பர் வணிகம் என நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 1 லட்சம் பேரின் வாழ்வாதாரம் உள்ளது.
- விவசாயிகள் தயாரிக்கும் ரப்பர் ஷீட்டின் விலை கிலோவிற்கு ரூ. 120 ஆக உள்ளது.
நாகர்கோவில், செப்.6-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, குமரி மாவட்ட தி.மு.க. முன்னாள் துணை செயலாளர் ஜாண் கிறிஸ்டோபர் அனுப்பி யுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் பிரதான வேளாண்மை சார்ந்த தொழிலாக ரப்பர் தோட்டத் தொழில் உள்ளது. இம்மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் ஹெக்ேடரில் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இதில் அரசு ரப்பர் கழகமும் அடங்கும். ரப்பர் தோட்டத் தொழிலை நம்பி பால்வ டிப்பு, ரப்பர் ஆலைத் தொழில், ரப்பர் நாற்றுப் பண்ணைகள் தொழில், ரப்பர் வணிகம் என நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 1 லட்சம் பேரின் வாழ்வாதாரம் உள்ளது.
இந்நிலையில் ரப்பர் மரங்களிலிருந்து வடித்து எடுக்கப்படும் ரப்பரின் (ரப்பர் பால், ரப்பர் ஷீட்) விலை கடுமையாகச் சரிந்துள்ளது. இதனால் குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகளின் வாழ்வா தாரம் கடுமையாக பாதிக்கப் பட்டு வருகிறது. தற்போது ஒரு கிலோ உலர் ரப்பர் ஷீட்டின் அதிகபட்ச விலை கிலோவிற்கு ரூ.146 ஆக உள்ளது.
அதே வேளையில் சிறு ரப்பர் தோட்ட விவசாயிகள் தயாரிக்கும் ரப்பர் ஷீட்டின் விலை கிலோவிற்கு ரூ. 120 ஆக உள்ளது. (கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிலோ ரூ. 250 வரை இருந்தது). ரப்பரின் விலை வீழ்ச்சியானது ரப்பர் தோட்டத் தொழிலை நம்பியிருக்கும் விவசாயி களையும், அதனைச் சார்ந்த உப தொழில்கள் செய்யும் மக்களையும் கடுமையாகப் பாதிக்க வைத்துள்ளது.
எனவே கன்னியாகுமரி மாவட்ட ரப்பர் விவசாயிகள் பயன்பெறும் வகையில், ரப்பரின் விலை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கை களை முதல்-அமைச்சர் எடுக்க வேண்டும். கேரள அரசைப் போல, தமிழக அரசும் ரப்பருக்கு தாங்கு விலை அளிக்கும் திட்டங் களை செயல்படுத்து வதுடன், ரப்பர் விவசாயி களுக்கான நலத்திட்டங்க ளையும் உருவாக்க வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத் தில் நடைமுறைப் படுத்தப் பட்டுள்ள தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டம் கார ணமாக, இம்மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான சிறு ரப்பர் தோட்ட விவசாயி களின் விளை நிலங்கள், குறிப்பாக ரப்பர் தோட்டங்கள் இச்சட்டத்தின் கீழ் தனியார் காடுகளாக வரையறை செய்யப்பட் டுள்ளன.
இதனால் நிலங்களில் நடவு செய்யப்பட்டுள்ள ரப்பர் மரங்கள் முதிர்ந்தவு டன் அவற்றை வெட்டி அகற்றி விட்டு மறு நடவு செய்ய முடியவில்லை. மேலும் விவசாயிகள் ரப்பர் தோட்டங்களை எளிதில் விற்பனை செய்ய முடி யவில்லை. எனவே தனியார் காடுகள் சட்டத்திலிருந்து விவசாயிகளின் ரப்பர் தோட்டங்கள் உள்பட விவசாய விளை நிலங்களை விடுவிக்க வேண்டும்.
மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில், திற்பரப்பு, கடையாலுமூடு உள்ளிட்ட பல்வேறு பேரூராட்சிப் பகுதிகளில் விவசாயிகளின் விளை நிலங்கள் மலையிடக் குழும நிலங்களாக வரையறை செய்யப் பட்டுள்ளன. எனவே மாவட்டத்தில், மலையிடக் குழும நிலங்களாக அறி விக்கப்பட்டுள்ள நிலங்களை அதிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்