search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை
    X

    திருவட்டார் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை

    • பழுதடைந்த சாலைகளை உடனே சீர் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
    • பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

    கன்னியாகுமரி:

    திருவட்டார் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் பேரூராட்சி மன்ற தலைவர் பெனிலா ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

    செயல் அலுவலர் மகாராஜன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் சுந்தர்ராஜ், கவுன்சிலர்கள் சுவாமிதாஸ், றாபி, ஸ்டாலின் ஜோஸ், ராஜம்மாள், புஷ்பம், ஜெஸ்டின் ராஜ், ராஜேந்திரன், பரமேஷ்வரி, உஷாகுமாரி, ராஜிலா, சுரேஷ், மணிகண்டன், செல்வி, சிந்து, லில்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் திருவட்டார் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை சரி செய்ய திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான பழுதடைந்த நீர் தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதியதாக 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி அமைப்பது என்றும், திருவட்டார் காவல் நிலையம் அருகில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி புதியதாக அமைப்பது என்றும், பேரூராட்சிக்கு உட்பட்ட பழுதடைந்த சாலைகளை உடனே சீர் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும், விவசாய நிலங்கள் வளம் பெற பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள குளம், ஏரிகளை உடனே தூர் வாரி விவசாயிகள் பயன் பெறும் வகையில் சீரமைக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×