என் மலர்
உள்ளூர் செய்திகள்
பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் சாலைபணி செய்தால் கடும நடவடிக்கை
- மேயர் மகேஷ் எச்சரிக்கை
- ரூ.4.25 லட்சம் செலவில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணியையும் அவர் தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில், செப்.27-
நாகர்கோவில் மாநகராட்சி 18-வது வார்டு சானல்கரை-சீயோன் தெருவில் ரூ.6 லட்சம் செலவில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணி இன்று தொடங்கியது. இந்த பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். 31-வது வார்டு தளவாய்புரம் யூதாஸ்தெருவில் ரூ.4.25 லட்சம் செலவில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணியையும் அவர் தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து 45-வது வார்டு பழவிளை தொழில்நுட்ப கல்லூரி அருகே நடந்த வரும் சாலை பணியையும், 47-வது வார்டு வல்லன் குமார விளையில் நடந்து வரும் சாலை பணிகளையும் மேயர் மகேஷ் ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர், சாலை பணிகளை தொடங்கும் போது சாலைகளை உடைத்து விட்டு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பணிகளை விரைவில் செய்து முடிக்கவேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பணிகள் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகளிடமும், ஒப்பந்தகாரர்களிடமும் கூறினார்.
இதனால் சிறிது பரபரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சியில் துணை மேயர் மேரிபிரின்சி லதா, கவுன்சிலர்கள் அமலசெல்வன். தங்கராஜா, தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், இளைஞரணி அருள்செல்வின். பகுதி செயலாளர் ஷேக்மீரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.