search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு உற்சாகமாக வந்த மாணவ-மாணவிகள்
    X

    கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு உற்சாகமாக வந்த மாணவ-மாணவிகள்

    • அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு
    • நோட்டு புத்தகங்கள் இன்றே வழங்கப்பட்டது

    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

    குமரி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. இதையொட்டி மாணவ-மாணவிகள் காலையிலேயே ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். அவர்களை பெற்றோர் தங்களது இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் அழைத்து வந்து பள்ளியில் விட்டனர்.

    இதனால் நாகர்கோவில் பகுதியில் உள்ள பள்ளிகள் முன் பெற்றோர் திரண்டி ருந்தனர். பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் இன்முகத்துடன் வர வேற்றனர். ஒரு சில அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.

    முதல் நாளான இன்று ஏராளமான மாணவ-மாணவிகள் சீருடைக்கு பதிலாக புத்தாடை அணிந்து வந்திருந்தனர். அவர்களை விரைவில் சீருடை அணிந்து வரும்படி ஆசிரியர்கள் கூறினர். ஒரு சில பள்ளிகளில் வழக்கம் போல சீருடை அணிந்து மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர்.

    அதே சமயம் புதிதாக ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு வந்ததும் தங்களது பெற்றோரை விட்டு பிரிய முடியாமல் அழுதனர். பள்ளிக்குப் போக மாட்டேன் என்று கூறி அழுததையும் பார்க்க முடிந்தது. அந்த மாணவ- மாணவிகளுக்கு பெற்றோர் சிறிது நேரம் ஆறுதல் கூறி மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

    பள்ளிகள் திறக்கப்பட்ட தை தொடர்ந்து வடசேரி பஸ் நிலையம் மற்றும் அண்ணா பஸ் நிலையம் காலை முதலே பரபரப்பாக காணப்பட்டது. பஸ்களிலும் மாணவ-மாணவிகள் கூட்டமே அதிகமாக இருந்தது. இரணியல், மார்த்தாண்டம், குளச்சல் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.

    குமரி மாவட்டத்தில் பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்த கங்கள் மற்றும் நோட்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதற்காக கடந்த சில தினங்க ளுக்கு முன்பே அந்தந்த பள்ளிகளுக்கு நோட்டு மற்றும் புத்த கங்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன. அவை அனைத்தும் இன்று மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

    அதுவே தனியார் பள்ளி மாணவ-மாணவி களுக்கு பள்ளி திறப்ப தற்கு முன்பாகவே பாட புத்தகங்கள் வழங்க ப்பட்டன. நாகர்கோவில் மாநகராட்சியில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் வந்து சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கேப் ரோடு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, வெட்டூர்ணிமடம் செல்லும் சாலை, ஆராட்டு ரோடு உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு போலீசார் போக்கு வரத்தை சீரமை க்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தோவாளை அருகே உள்ள விசுவாசபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் இன்று மாணவ-மாணவிகள் வருகையினை முன்னிட்டு மாணவ மாணவிகளை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் உதயகுமாரி தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் விஜேஷ் வரவேற்று பேசினார்.தொடக்கப்பள்ளி கல்வி துறை அலுவலர் லதா, தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினிபகவதியப்பன், சகாய நகர் ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ் ஏஞ்சல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி பின்னர் பள்ளிக்கு வந்திருந்த மாணவ மாணவிகளை வாழ்த்தி பேசியதுடன் இனிப்புகள் வழங்கி வரவேற்றார்.

    Next Story
    ×