search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுமைப்பெண் திட்டத்தில் சேர மாணவிகள் வருகிற 4-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
    X

    புதுமைப்பெண் திட்டத்தில் சேர மாணவிகள் வருகிற 4-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

    • 2022-2023-ம் ஆண்டில் 152 கல்வி நிறுவனங்களிலிருந்து 3349 மாணவிகள் பயன் அடைந்துள்ளனர்
    • வலைதளமானது www.puthumaipenn.tn.gov.in செப்டம்பர் 4-ந் தேதி அன்று தொடங்கப்பட உள்ளது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தும் புதுமைப்பெண் திட்டமானது தமிழ்நாடு முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டில் 152 கல்வி நிறுவனங்களிலிருந்து 3349 மாணவிகள் பயன் அடைந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக 2023-2024-ம் கல்வியாண்டிற்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் சேர்க்கைக்கான வலைதளமானது www.puthumaipenn.tn.gov.in செப்டம்பர் 4-ந்தேதி அன்று தொடங்கப்பட உள்ளது. தகுதியுள்ள பயனாளிகள் தாங்கள் கல்வி பயிலும் அந்தந்த கல்வி நிறுவனங்களின் வாயிலாகவே விண்ணப் பக்க வேண்டும். கன்னியா குமரி மாவட்டத்தில் செயல்படும் கல்வி நிறுவ னங்களில் மேல்படிப்பு, தொழிற்நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும் தகுதி வாய்ந்த மாணவிகள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்ப முறையினை சரியாக தெரிந்து கொண்டு, கடைசி தேதிக்கு முன்பாக தவறாமல் கல்வி பயிலும் அந்தந்த கல்வி நிறுவனங்களின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×