என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் நீட் தேர்வு மையத்தில் காலையிலேயே குவிந்த மாணவ-மாணவிகள் - பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்
    X

    குமரி மாவட்டத்தில் நீட் தேர்வு மையத்தில் காலையிலேயே குவிந்த மாணவ-மாணவிகள் - பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்

    • விண்ணப்பித்தவர்கள் மதியம்தான் தேர்வு என்றாலும் காலையிலேயே தேர்வு மையத்திற்கு வர தொடங்கினார்கள்.
    • தற்பொழுது எடுத்த புகைப்படத்தை ஒட்டியிருப்பதை பரிசோதித்து தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர்.

    நாகர்கோவில் :

    நாடு முழுவதும் தேசிய மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு இன்று மதியம் நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் 6 மையங்களில் தேர்வு நடக்கிறது. தேர்வு எழுதுவதற்கு 4473 பேர் விண்ணப்பித்து உள்ளனர். நாகர்கோவில் ஒழுகினசேரி ராஜாஸ் இண்டர்நேஷனல் பள்ளி, சுங்கான்கடை வின்ஸ் கிறிஸ்டியன் கல்லூரி, தோவாளை லயோலா பொறியியல் கல்லூரி, ஆரல்வாய்மொழி டி.எம்.ஐ. பொறியியல் கல்லூரி, இறச்சகுளம் அமிர்தா பொறியியல் கல்லூரி, கோணம் கேந்திர வித்யாலயா பள்ளி ஆகிய 6 மையங்களில் தேர்வு நடந்தது.

    தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் மதியம்தான் தேர்வு என்றாலும் காலையிலேயே தேர்வு மையத்திற்கு வர தொடங்கினார்கள். இதனால் தேர்வு மையங்களின் முன்பு கூட்டம் அலைமோதியது. தேர்வு எழுத வந்த பெண்களை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அழைத்து வந்திருந்தனர்.

    கொளுத்தும் வெயி லையும் பொருட்படுத்தாமல் தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகள் தேர்வு மையத்திற்கு வெளியே காத்திருந்தனர். தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளை பலத்த பரிசோதனைக்கு பிறகு தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர்.

    தேர்வு மையத்துக்குள் செல்போன் மற்றும் கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக்கல் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. மேலும் தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகள் தேர்வு கூடத்திற்கான விண்ணப்பத்துடன் தற்பொழுது எடுத்த புகைப்படத்தை ஒட்டியிருப்பதை பரிசோதித்து தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர்.

    தேர்வு மையத்திற்கு வந்தவர்கள் முக கவசம் அணிந்திருந்தனர். மாணவ-மாணவிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை தெர்மல் ஸ்கேனர் மூலமாக மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒருசில மாணவர்களுக்கு வெயிலின் காரணமாக உடலில் ெவப்பம் அதிகமாக இருந்தது. இதையடுத்து அவர்களை சிறிது நேரம் அமர வைத்து பின்னர் பரிசோதனை செய்து தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர். மேலும் கை கழுவும் திரவங்களும் வழங்கப்பட்டது.

    மதியம் தேர்வு தொடங்கி மாலை வரை நடக்கிறது. தேர்வு மையத்திற்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாணவ- மாணவிகள் தேர்வு மையத்திற்குள் சென்றாலும் அவர்களது பெற்றோர்கள் தேர்வு ைமயத்திற்கு வெளியே காத்திருந்தனர்.

    Next Story
    ×