search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் கடல்நீர்மட்டம்திடீர்தாழ்வு - விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 1 மணி நேரம் தாமதம்
    X

    கன்னியாகுமரியில் கடல்நீர்மட்டம்"திடீர்"தாழ்வு - விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 1 மணி நேரம் தாமதம்

    • குறைந்த அளவு வள்ளம் கட்டுமரங்களில் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
    • அதேசமயம் இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் அமைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் இன்றுகாலை விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துள்ள வங்க கடல் பகுதியில் கடல் நீர் மட்டம் "திடீர்"என்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. அதேசமயம் இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் அமைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இதனால் இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து 1 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. காலை 9 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 1 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. காலை 9 மணி முதல் சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டுவந்தனர். இதற்கிடையில் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இதனால் குறைந்த அளவு வள்ளம் கட்டுமரங்களில் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    Next Story
    ×