என் மலர்
உள்ளூர் செய்திகள்
குழித்துறை அருகே மின்கம்பத்தில் டெம்போ மோதி விபத்து
- மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
- மின்வாரிய ஊழியர்கள் உடைந்த மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி:
குழித்துறை பாலமலை செல்லும் சாலையில் செங்கல் சூளைக்கு விறகு ஏற்றிக்கொண்டு டெம்போ வண்டி சென்று கொண்டிருந்தது.
அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த டெம்போ அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் இரண்டாக உடைந்தது இதனால் குழித்துறை சுற்றுவட்டார பகுதிகள் சுமார் 3 மணிநேரம் இருளில் மூழ்கியது. இதையடுத்து அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும் போக்குவரத்து சுமார் மூன்று மணி நேரம் வாகனங்கள் சிக்கித் தவித்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் உடைந்த மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை. பொதுமக்களும் மற்றும் வாகன ஓட்டிகளும் போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய டெம்போவை, ஓட்டுனர் அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளார். இந்த சம்பவத்தால் நேற்று இரவு குழித்துறையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.