என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வெள்ளிச்சந்தை அருகே டெம்போ டிரைவர் மயங்கி விழுந்து சாவு
- இறந்துபோன பாலகிருஷ்ணனுக்கு 18 மற்றும் 15 வயதில் 2 மகன்கள் உள்ளனர்.
- மண் கொட்டும் இடத்தில் வண்டியை திருப்பியபோது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
ராஜாக்கமங்கலம் :
நெல்லை மாவட்டம் இருக்கன் துறையை சேர்ந்தவர் சுப்பையா. அவரது மகன் பாலகிருஷ்ணன் (வயது 37). இவர் கூடங்குளம் பகுதியில் உள்ள ஒரு மணல் குவாரி நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் கூடங்குளத்தில் இருந்து பிள்ளை தோப்புக்கு டெம்போவில் பாறை மண் கொண்டு வந்தார். பிள்ளை தோப்பில் மண் கொட்டும் இடத்தில் வண்டியை திருப்பியபோது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
உடனடியாக வண்டியை நிறுத்தி விட்டு சத்தம் போடவே அருகில் உள்ளவர்கள் வருவதற்குள் அவர் மயங்கி விழுந்து டெம்போக்கு உள்ளேயே இறந்தார். உடனடியாக அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து அவரது மனைவி ரத்தினம் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்துபோன பாலகிருஷ்ணனுக்கு 18 மற்றும் 15 வயதில் 2 மகன்கள் உள்ளனர்.