என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவட்டார் அருகே அனுமதியின்றி கல் ஏற்றிச் சென்ற டெம்போ பறிமுதல்
- திருவட்டார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி :
திருவட்டார் அருகே ஆற்றூர், சிதறால் திக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பாறையை உடைத்து துண்டுகளாக மாற்றி வேலிக்கல் மற்றும் பாலக்கல் போன்ற தேவைகளுக்கு அனுமதி பெற்று எடுத்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் சிதறால் பகுதியிலிருந்து டெம்போவில் வேலிக்கல் கடத்துவதாக திருவட்டார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் ஆற்றூர் உள்ளிட்ட பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த டெம்போவை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில் அனுமதி இல்லாமல் வேலிக்கல் ஏற்றி தார்ப்பாய் போட்டு மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் டெம் போவை கல்லுடன் பறிமுதல் செய்தனர். பின்னர்அதனை திருவட்டார் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






