search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சப்-கலெக்டர் சமரசத்தால் போராட்டம் கைவிடப்பட்டது
    X

    சப்-கலெக்டர் சமரசத்தால் போராட்டம் கைவிடப்பட்டது

    • பலியான மீனவர் உடல் இன்று பிரேத பரிசோதனை
    • ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தின் தென் மேற்கு பகுதியில் அமைந்து உள்ளது தேங்கா ப்பட்டணம் மீன்பிடித் துறை முகம். இந்த துறைமுகம் கட்டப்பட்ட நாளில் இருந்து பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

    சரியான கட்டமைப்புடன் துறைமுகம் கட்டப்படாத தால் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து மீனவர்கள் பலியாவது தொடர் கதை யாக நடந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் இங்கு 25-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் இனயம் புத்தன் துறை கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த அமல்ராஜ் (வயது 67) வள்ளம் கவிழ்ந்து கடலில் விழுந்தார். அவரது உடல் 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.

    இந்த சூழலில் தேங்கா பட்டணம் மீன்பிடி துறைமு கத்தை மறு சீரமைப்பு செய்ய வலியுறுத்தி இனயம், தூத்தூர் மண்டலங்களை சேர்ந்த 15 மீனவ கிராம மக்கள் தேங்கா பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அவர்கள் அமல்ராஜ் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பாமல் மீன்பிடி துறைமுக ஏலக் கூடத்தில் வைத்து போராட்டம் நடத்தி னர்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. இது குறித்த தகவல் கிடைத்ததும் குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் கூறுகையில், இதுவரை 28 மீனவர்கள் இறந்துள்ளனர். இனியும் தாமதிக்காமல் துறைமுகத்தை உடனே மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றனர். மேலும் பணிகள் தொடங்கிட துறை முகத்தை மூட வேண்டும், உயிரிழந்த வர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

    போராட்டம் குறித்த தகவல் கிடைத்ததும் பத்ம நாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை, கிள்ளி யூர் தாசில்தார் ராஜேஷ் ஆகியோர் விரைந்து வந்து மீனவப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். துறைமுகத்தை மூடுவது பற்றியும், நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

    அதன்பிறகு இரவு 7.30 மணிக்கு அமல்ராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக போலீசாரிடம் ஒப்படை க்கப்பட்டது. போலீசார் உடலை பெற்று ஆசாரி பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இன்று அமல்ராஜ் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதன் காரணமாக ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டு இருந்தது.

    Next Story
    ×