search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேகமாக பரவுகிறது குமரியில் ஒரே நாளில் 78 பேருக்கு கொரோனா
    X

    வேகமாக பரவுகிறது குமரியில் ஒரே நாளில் 78 பேருக்கு கொரோனா

    • மாணவர்களும் காய்ச்சலால் அவதி
    • அரசு அலுவலகங்களில் உள்ள பணியாளர்கள் அனைவரும் முக கவசத்துடன் பணியாற்றி வருகிறார்கள்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

    இதையடுத்து சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். பொது இடங்களுக்கு வருபவர்கள் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் உள்ள பணியாளர்கள் அனைவரும் முக கவசத்துடன் பணியாற்றி வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தை ஒட்டி உள்ள கேரளாவில் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து எல்லை பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் பரிசோதனை தீவிர படுத்தப்பட்டு உள்ளது.

    நேற்று 985 பேருக்கு சோதனை நடத்தப்பட்டதில் 78 பேருக்கு கொேரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 41 பேர் ஆண்கள், 37 பேர் பெண்கள் ஆவார்கள். இதில் 5 குழந்தைகளும் அடங்கும்.

    கடந்த 25 நாட்களில் மட்டும் 600 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகரப் பகுதியில் இன்றும் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மேல்புறம், முஞ்சிறை ஒன்றியங்களிலும் கொத்து கொத்தாக மக்கள் கொரோனா பாதிப்பு க்குள்ளாகி வருகிறார்கள். ஏற்கனவே அந்த ஒன்றிய பகுதிகளில் ஏராளமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று மேற்புறம் ஒன்றியத்தில் 14 பேருக்கும், முஞ்சிறை ஒன்றியத்தில் 17 பேருக்கும், தொற்று உறுதியாகியுள்ளது.

    ஒரே வீட்டில் மூன்று பேருக்கு தொற்று உறுதி செய்யப்ப ட்டதை யடுத்து அவ ர்கள் தனிமைப்படுத்த ப்பட்டு உள்ளனர். மேலும் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த அனை வரும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் 4 பேரும், கிள்ளியூரில் 5 பேரும், ராஜாக்கமங்கலம், திருவ ட்டாரில் தலா 3 பேரும், தோவாளையில் 11 பேரும், தக்கலை, குருந்தன்கோட்டில் தலா 4 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

    மாவட்டம் முழுவதும் தற்பொழுது பள்ளிகள் திறந்து செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கு மாணவர்கள் சென்று வருகிறார்கள். இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கும் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காய்ச்சல் பாதிப்பு உள்ள பள்ளிகளில் சுகாதாரத்துறை அதிகாரி கள் கண்காணிப்பு பணியை யும் மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×