என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காவல்கிணறு 4 வழிச்சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட டோல்கேட்டை திரும்ப பெற வேண்டும்
- அதிகாரிகளிடம் விஜய் வசந்த் எம்.பி.வலியுறுத்தல்
- டோல்கேட் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு செய்தார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே 13½ டன் எடை கொண்ட லாரிைய 4 நிமிடத்தில் 111 மீட்டர் தூரம் இழுத்து உலக சாதனை படைத்தார் தாமரைகுட்டிவிளையை சேர்ந்தவர் கண்ணன். நிகழ்ச்சியை விஜய் வசந்த் எம்.பி., மேயர் மகேஷ், பிரின்ஸ் எம்.எல்.ஏ., பாரதிய ஜனதா பொருளாளர் முத்துராமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பொதுமக்களுக்கும், பார்வையாளர்களுக்கும் கண்ணனின் சாதனை மெய்சிலிர்க்க வைத்தது. இவர் இதற்கு முன் பல சாதனைகளை நிகழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகர்கோவிலில் விஜய் வசந்த் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:
நாகர்கோவிலை சேர்ந்த வாலிபர் கண்ணன் 13½ டன் எடை உள்ள லாரியை இழுத்து சாதனை படைத்துள்ளார். அவர் குமரி மாவட்டத்திற்கு மட்டுமின்றி தமிழகத்துக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
குமரி மாவட்டத்தில் தற்போது நான்கு வழிச்சாலை பணிகள் பல்வேறு பிரச்சினைகளால் நடைபெறாமல் இருந்தன. இது தொடர்பாக மத்திய மந்திரியிடம் பேசி தற்போது பணிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இன்னும் ஓராண்டுக்குள் பணிகள் ஓரளவு முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த நிலையில் நாகர்கோவில் - காவல்கிணறு சாலை முடிவுற்று தற்போது கட்டண விபரங்களும் அறி விக்கப்பட்டிருக்கின்றன .
ஏற்கனவே நாங்கு நேரியில் டோல்கேட் இருக்கும் பட்சத்தில் 45 கிலோமீட்டருக்குள் மற்றொரு டோல்கேட் என்பது வாகன ஓட்டிகளை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும். மேலும் டோல்கேட் அமைந்துள்ள பகுதியை கடந்து நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களை சேர்ந்த வாகனங்கள் அதிக அளவில் செல்லும்.
இந்த வாகனங்களுக்கு எல்லாம் கட்டணம் என்பது பெரும் அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே உடனடியாக இந்த டோல்கேட்டை திரும்ப பெற வேண்டும் . இது தொடர்பாக ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைவரிடம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. குமரி மாவட்டத்தில் நான்கு வழி சாலை பணிகளை பொறுத்தவரை தற்போது ஒன்றிய அரசு மிகவும் மந்தமான நிலையில் நடந்து கொள்கிறது .
காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி இங்கு வலுவாக இருப்பதால் பணிகள் முடிந்தால் அந்த நற்பெயர் தங்களுக்கு கிடைக்காதோ என்ற வருத்தத்தில் பணி களை கிடப்பில் போட்டு உள்ளனர். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக டோல்கேட் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு செய்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்