search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் அருகே நடந்த கொலையில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
    X

    திருவட்டார் அருகே நடந்த கொலையில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

    • சகோதரர் மகளை அவதூறாக பேசியதால் நண்பரை தாக்கி கொலை செய்தேன்
    • திருவட்டார் போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே சித்திரங்கோடு பகுதியில் அலங்கார தரையோடுகள் தயாரிக்கும் கம்பெனி உள்ளது.

    இங்கு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சோம்பு பிஸ்வாஷ் (வயது 28), அனில் பார்மன் (22) மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் வேலை பார்த்து வந்தனர். இதற்காக 5 பேரும் அந்த பகுதியில் அறை எடுத்து தங்கி வசித்து வருகின்றனர்.

    நேற்று பணிமுடிந்து அறைக்கு வந்த 5 பேரும் ஒன்றாக மது அருந்தி உள்ள னர். அப்போது சோம்பு பிஸ்வாஷ், அனில்பார்மன் இடையே தகராறு ஏற் பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அனில்பார்மன் பாட்டில் மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியதில் சோம்பு பிஸ்வாஷ் பரிதாபமாக இறந்தார்.

    கொலை குறித்த தகவல் கிடைத்ததும் திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்காதர் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சோம்பு பிஸ்வாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரது உறவினர்கள் அசாம் மாநிலத்தில் இருந்து வர 3 நாட்கள் ஆகலாம் என்பதால் பிரேத பரி சோதனைக்கு பிறகு சோம்பு பிஸ்வாஷ் உடல் அங்கேயே வைக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையில் தப்பி ஒடிய அனில் பார்மனை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான கார ணம் குறித்து அவர் போலீ சாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், மது அருந்திக் கொண்டிருக்கும் போது சோம்பு பிஸ்வாஷ் குடி போதையில், எனது சகோதரர் மகள் பற்றி அவதூறாக பேசினார். இதனை நான் கண்டித்தேன்.

    ஆனால் அவர் கேட்கவில்லை. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அங்கு கிடந்த இரும்பு கம்பியால் தாக்கினேன். இதில் சோம்பு பிஸ்வாஷ் இறந்து விட்டார் என குறிப்பிட்டு உள்ளார்.

    Next Story
    ×