என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருவள்ளுவர் சிலைக்கு கடுக்காய், சுண்ணாம்பு கலந்த சிமெண்ட் கலவை பூசும் பணி தொடக்கம்
- திருவள்ளுவர் சிலை 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.
- 2017 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடைசியாக ரசாயனகலவை பூசப்பட்டது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டு உள்ளது. இந்த சிலை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த திருவள்ளுவர் சிலையை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று கண்டு களித்து வருகின்றனர்.
இந்தசிலை கடல் உப்புக்காற்றினால் பாதிப் படையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறைரசாயன கலவை பூசப்படுவது வழக்கம். கடந்த 2017 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடைசியாக ரசாயனகலவை பூசப்பட் டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் ரசாயன கலவை பூசஅரசுநடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பணி நடைபெற வில்லை.
தற்போதுரூ.1கோடி செலவில்திருவள்ளுவர் சிலையில் இந்த ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற்றுவருகிறது. இந்தப்பணி நடைபெற உள்ளதை தொடர்ந்து கடந்தஜூன்மாதம் 6-ந்தேதி முதல் வருகிற நவம்பர் மாதம் 2-ந் தேதி வரை 5மாதங்களுக்கு திருவள்ளுவர் சிலையைபார்வையிட சுற்றுலா பயணி களுக்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்து உள்ளது.
இந்தநிலையில் இந்த பணியை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடந்த ஜூன்மாதம் 6-ந்தேதி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக இந்த சிலையை சுற்றிலும் 145 அடி உயரத்துக்கு இரும்பு குழாய்கள் மூலம் சாரம் அமைக்கும் பணி நடைபெற்றது.
இதற்காக சென்னை மற்றும்தூத்துக்குடியில் இருந்து 80 டன் இரும்பு குழாய்கள் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது. இவை படகுகள் மூலம் திருவள்ளுவர் சிலை அமைந்து உள்ள பாறைக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது ரசாயனக் கலவை பூசுவதற்காக சிலை முழுவதும் நல்ல தண்ணீர் மூலம் கழுவி சுத்தம் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து சிலையின் ஒவ்வொரு பகுதியில் உள்ள சிமெண்ட் பாய்ண்ட்க ளில் படிந்திருக்கும் கடல் உப்பு தன்மை அகற்றப்பட்டு கடுக்காய், சுண்ணாம்பு, பனை வெல்லம் ஆகியவை கலந்த சிமெண்ட் கலவை பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்த கட்டமாக சிலையில் ரசாயன கலவை பூசும் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்