search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் கோவில் கும்பாபிேஷகம் அனைத்து துறை அதிகாரிகளுடன்  அமைச்சர் மனோதங்கராஜ் ஆலோசனை
    X

    திருவட்டார் கோவில் கும்பாபிேஷகம் அனைத்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் மனோதங்கராஜ் ஆலோசனை

    • திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா 418 வருடங்களுக்கு பிறகு நடைபெற உள்ளது
    • கும்பாபிஷேக நாளன்று (6-ந் தேதி) பொது விடுமுறை வழங்க முதல் அமைச்சருக்கு கோரிக்கை

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருவட்டார் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் ஜூலை மாதம் 6-ந் தேதி மகா கும்பாபிஷேக விழா நடத்துவது குறித்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடை பெற்றது.

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த தலைமையில், எஸ்.பி ஹரி கிரண் பிரசாத் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு, துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    திருவட்டார் ஆதி கேசவப்பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா 418 வருடங்களுக்கு பிறகு நடைபெற உள்ளதை யொட்டி, மாவட்ட நிர்வாகத்திலுள்ள அனைத்து துறையினரும். ஒன்றிணைந்து பணியாற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    காவல்துறையினர் வருகிற 29-ந் தேதி முதல் ஜூலை 9-ந் தேதி வரை பக்தர்க ளுக்கு தேவையான பாது காப்பு வசதிகளை செய்ய வேண்டும்.

    கும்பாபிஷேக தினத் தன்று கூடுதல் பாது காப்பு வழங்குவதோடு புறக்காவல் நிலையம் அமைத்தல், தனியார் வாகனங்களை ஒழுங்குப் படுத்தி அதற்குரிய இடத் தில் நிறுத்தம் செய்வதற் கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

    மின்சார வாரியதுறை யினர் தங்கு தடையின்றி சமச் சீரான மின்சாரம் வழங் குவதோடு கோவிலை சுற்றியுள்ள சாலை யோரங்களில் உள்ள மின் விளக்குகள் தடையின்றி எரிவதற்கும் ஆவன செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    போக்குவரத்துக்கழகம் வாயிலாக மாவட்டத் திற்குட்பட்ட அனைத்து பேருந்துதடங்களிலிருந் தும் பக்தர்களின் தேவைக் கேற்ப சிறப்பு பேருந்துகள். இயக்கநடவடிக்கைமேற் கொள்ள வேண்டும்.

    திருவட்டாறு பேரூ ராட்சி வாயிலாக வாகன பவனி வரும் தெரு, வீதி கள் மற்றும் கிராமம் வரை யிலான சாலைகளையும், பேருந்து நிலையம் முதல் திருக்கோவில் வரையிலான சாலைகளையும் சீர் செய்தல், தெருவீதிகளை சுத்தமாக பராமரித்தல், பக்தர்களுக்கு தற்காலிக கழிவறைகள் அமைத்து அதற்கு தேவையான தண்ணீரை வழங்குதல், கும்பாபிஷேக நாட்களில் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டிய ஏற்பாடுகள் செய்தல், வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகளை நிறுத்தம் செய்ய அனும திக்காது இருத்தல்.

    வீதிகளில் குறுக்கே விளம்பர பேனர்கள் கட்டுவதை தடை செய்வதற் கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    சுகாதாரத்துறை அலு வலர்கள் பக்தர்களுக்கு வேண்டிய சுகாதார ஏற் பாடுகள் செய்தல், சுகா தார வசதிகள் செய்தல் மற்றும் சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

    மருத்துவத்துறை சார்பாக கோவிலுக்குச் சொந்தமான கட்டிடத் தில் புறநோயாளிகள் சிகிச்சைப்பிரிவு ஒன்று தற்காலிகமாக அமைத்து மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருந்தாளுனர் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அவசர வச திகள் செய்தவதை உறுதிப டுத்த வேண்டும்.

    பொதுப் பணித்துறையின் வாயிலாக பந்தல் மற்றும் பேரிகாட் பணிகளை பார்வையிட்டு உறுதித்தன்மை சான்றிதழ் வழங்க வேண்டும்.

    நெடுஞ்சாலை மற்றும் கிராமப்பணிகள் வாயி லாக பந்தல் அமைப்ப தற்கு அனுமதி வழங்குதல், திருவட்டாறு நான்குமுனை சந்திப்பு. திருவட்டாறு தபால் நிலையம் சந்திப்பு. திருவட்டாறு காங்கரை சந்திப்பு. திருவட்டாறு எக்சல் பள்ளி சந்திப்பு, ஆற்றார் கழுவனதிட்டை சந்திப்பு, திருக்கோயிலுக் குச்செல்லும் அனைத்து சாலைகளும் சீரமைத்து செப்பனிட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மேலும் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க கும்பாபிஷேக நாளன்று (6-ந் தேதி) பொது விடுமுறை வழங்க முதல் அமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    கூட்டத்தில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் டாக்டர் அலர்மேல் மங்கை, இந்து சமய அற நிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகர், உடபட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×