search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் இன்று  பார்வதிபுரம் மேம்பாலத்தில் மத்திய மந்திரி பகவத் கிஷன் ஆய்வு
    X

    நாகர்கோவிலில் இன்று பார்வதிபுரம் மேம்பாலத்தில் மத்திய மந்திரி பகவத் கிஷன் ஆய்வு

    • பேயன்குழி பகுதியில் இரட்டை ரெயில் பாதை பணிகளையும் பார்வையிட்டார்
    • மஸ்கட்டில் தவிக்கும் 8 மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    நாகர்கோவில்:

    மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் கிஷன் ராவ் கராத், குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக ஆய்வு பணியை மேற்கொண்டு உள்ளார்.

    இன்று 3-வது நாளாக மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்ட ங்கள் குறித்து பகவத் கிஷன் ராவ் கராத் ஆய்வு மேற்கொண்டார். பார்வதி புரத்தில் கட்டப்பட்ட பாலத்தை பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார்.

    அப்போது குமரி மாவட்டத்தில் இருந்து மஸ்கட்டில் மீன்பிடிக்க சென்ற படகில் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்தி னர், பகவத் கிஷன் ராவ் கராத்தை சந்தித்து மனு கொடுத்தனர்.

    அதில் கன்னியாகுமரியை சேர்ந்த ஒருவர், ராஜாக்க மங்கலத்தைச் சேர்ந்த 2 பேர் பெரிய காட்டை சேர்ந்த 5 பேர் என 8 மீனவர்கள் ஓமன் நாட்டில் மஸ்கட் பகுதியில் மீன் பிடிக்க சென்றனர்.அங்கு சென்ற அவர்களை மீன் பிடிக்க விடாமல் சம்பளமும் கொடுக்காமல் படகிலேயே சிறை பிடித்து வைத்துள்ளனர்.

    மேலும் மீனவர்களின் விசாக்களும் புதுப்பிக்காமல் உள்ளதால் அவர்கள் ஊருக்கு வர முடியாமல் தவித்து வருகிறார்கள்.எனவே மஸ்கட்டில் தவிக்கும் 8 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மந்திரி பகவத் கிஷன் ராவ் கராத் உறுதி அளித்தார்.

    இதை தொடர்ந்து பேயன்குழி பகுதியில் நடந்து வரும் 4 வழி சாலை மற்றும் இரட்டை ரெயில் பாதை திட்ட பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., பா.ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ், பொருளாளர் முத்து ராமன்,மாநில மகளிர் அணி தலைவி உமாரதிராஜன் மற்றும் கிருஷ்ணகுமார்,கிருஷ்ணன் ஆகியோரும் இருந்தனர்.

    Next Story
    ×