என் மலர்
உள்ளூர் செய்திகள்
குமரியில் ராகுல்காந்தி சுற்று பயணத்திற்கு விஜய்வசந்த் எம்.பி. உட்பட 18 பேர் தலைமையில் குழுக்கள் அமைப்பு
- இந்திய ஒற்றுமை பயண தமிழக ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கே.ஜெயக்குமார் எம்.பி, மேற்பார்வையில் செயல்படும்.
- வரவேற்புக் குழு விஜய் வசந்த் எம்.பி., தங்கும் வசதி ஏற்பாடுக்குழு எஸ்.ஜோதி மணி எம்.பி.,
நாகர்கோவில்:
ராகுல்காந்தி வரும் செப்டம்பர் மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை 3500 கி.மீ., 150 நாள் இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்து செயல்படுத்த காங்கிரஸ் கட்சியால் 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுக்கள் இந்திய ஒற்றுமை பயண தமிழக ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கே.ஜெயக்குமார் எம்.பி, மேற்பார்வையில் செயல்படும்.
வரவேற்புக் குழு விஜய் வசந்த் எம்.பி., தங்கும் வசதி ஏற்பாடுக்குழு எஸ்.ஜோதி மணி எம்.பி., பொதுக்கூட்ட ஏற்பாடு குழு டாக்டர் ஏ.செல்லக்குமார் எம்.பி., நிகழ்ச்சி கண்காணிப்பு குழு டாக்டர் இ.எம்.சுதர்சன் நாச்சியப்பன், மக்கள் தொடர்பு குழு சி.டி. மெய்யப்பன், நடைபயண அலங்கார குழு கிறிஸ்டோபர் திலக், மக்களை திரட்டும் குழு மயூரா எஸ்.ஜெயக்குமார், விளம்பர பொருட்கள் விநியோக குழு டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத் எம்.பி. நிதிக்குழு டாக்டர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., ஊடகம் மற்றும் விளம்பர குழு ஆ.கோபண்ணா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழு பொன். கிருஷ்ண மூர்த்தி, போக்குவரத்துக குழு கீழானூர் ராஜேந்திரன், மாவட்ட தலைவர்கள் ஒருங்கிணைப்பு குழு செங்கம் ஜி குமார், முன்னணி அமைப்புகள் ஒருங்கிணைப்பு குழு வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன், துறைகள் மற்றும் பிரிவுகள் ஒருங்கிணைப்பு குழு எம்.பி. ரஞ்சன் குமார், சமூக ஊடக குழு லட்சுமி காந்தன், அரசு அனுமதி பெறும் குழு வழக்கறிஞர் சந்திரமோகன், உணவு குழு பவன் குமார் ஆகிேயார் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள் ளார்.