search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்ட அணைப்பகுதிகளில் பரவலான மழை நீடிப்பு
    X

    குமரி மாவட்ட அணைப்பகுதிகளில் பரவலான மழை நீடிப்பு

    • பெருஞ்சாணியில் 34 மில்லி மீட்டர் பெய்தது
    • பல இடங்களிலும் நேற்று முன்தினம் மழை பெய்தது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை சுட்டெரித்து வந்தது. அக்னி நட்சத்திரத்தை நினைவு படுத்தும் வகையில் வெப்பத்தின் தாக்கம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் வளி மண்டலத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக குமரி மாவட்டத்தில் பல இடங்களிலும் நேற்று முன்தினம் மழை பெய்தது. பகலிலும் வெப்பம் குறைந்து மேகமூட்டமாகவே காணப்பட்டது. நேற்று 2-வது நாளாக அணைப்பகுதிகளில் பரவலாக மழை நீடித்தது. இதனால் மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து இரவிலும் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    பெருஞ்சாணியில் அதிக பட்சமாக 34 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. புத்தன் அணையில் 30.2, சுருளோட்டில் 27, பூதப்பாண்டியில் 22.4, சிற்றாறு-1 பகுதியில் 20.6, பேச்சிப்பாறையில் 16.8, முக்கடல் அணையில் 10, தக்கலையில் 9.2, ஆரல்வாய் மொழியில் 6.2, நாகர்கோவி லில் 5, பாலமோரில் 4.2, கன்னிமார், சிற்றாறு-2 பகுதிகளில் தலா 2.2, மாம்பழத்துறையாறு 1 மில்லி மீட்டர் மழை பெய்த தாக பதிவாகி உள்ளது.

    மழையின் காரணமாக சிற்றாறு-1 அணைக்கு விநாடிக்கு 6 கன அடி நீரும், சிற்றாறு-2 அணைக்கு 10 கன அடி நீரும், பேச்சிப்பாறை அணைக்கு 244 கன அடி நீரும், பெருஞ்சாணி அணைக்கு 34 கனஅடி நீரும் வந்து கொண்டிருக்கிறது.

    77 அடி கொண்ட பெருஞ்சாணி அணையில் தற்போது 36.90 அடியும், 48 அடி கொண்ட பேச்சிப்பாறையில் 36.05 அடியும் தண்ணீர் உள்ளது. சிற்றாறு-1 அணையில் 8.10 அடியும், சிற்றாறு-2 அணையில் 8.20 அடியும், பொய்கை அணையில் 13.70 அடியும், மாம்பழத்துறை யாறு அணையில் 2.30 அடியும் தண்ணீர் உள்ளது. இதில் பெருஞ்சாணி அணையில் இருந்து 51 கன அடி தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது.

    Next Story
    ×