என் மலர்
உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை படத்தில் காணலாம்
கன்னியாகுமரியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த தொழிலாளி கைது
- 28 மதுபாட்டில்கள் பறிமுதல்
- கன்னியாகுமரி சிலுவைநகர் டாஸ்மாக் மதுக்கடை பார் அருகே விற்பனை செய்வதற்காக ரகசியமாக பதுக்கல்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி சிலுவைநகர் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை பார் ஒன்று உள்ளது. இதன்அருகே மது பாட்டில்கள் ரகசியமாக பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கன்னியாகுமரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது சிலுவை நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் மது கடை பார் அருகே ஒருவர் மது பாட்டில்களை ரகசியமாக விற்பனைசெய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவரது பெயர்துரைசாமி (வயது 52) என்றும் நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள மேலத்திடியூர் பகுதியை சேர்ந்த தொழிலாளி என்பதும் தெரிய வந்தது. இதைதொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மேலும் கன்னியாகுமரி சிலுவைநகர் டாஸ்மாக் மதுக்கடை பார் அருகே விற்பனை செய்வதற்காக ரகசியமாக பதுக்கி வைத்திருந்த 28 குவாட்டர் மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.






