search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே நெய்யூர் தபால் நிலையத்தில் திருடிய வாலிபர் கைது
    X

    இரணியல் அருகே நெய்யூர் தபால் நிலையத்தில் திருடிய வாலிபர் கைது

    • உயர் அதிகாரிகளுக்கும், இரணியல் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தார்
    • கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர்.

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே நெய்யூர் தபால் அலுவலகத்தில் தபால் அதிகாரியாக கமலாபாய் என்பவர் பணிபுரிகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் தபால் அலுவலகம் திறக்க வந்த போது முன் பக்கத்தில் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது லாக்கர் அறையில் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி அவர் உயர் அதிகாரிகளுக்கும், இரணியல் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தார். இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அலுவலக செல்போன் திருட்டு போனது தெரிய வந்தது. மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர்.

    இதில் வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கின் குற்றவாளி கைரேகையுடன் ஒத்து போனது தெரியவந்தது. அவர் திங்கள் நகர் பறயம் விளை பகுதியை சேர்ந்த வில்சன் (வயது 35) என்பவர் ஆவார். அவரிடம் போலீசார் கோர்ட்டு உத்தரவு பெற்று விசாரணை நடத்தியதில் அவர் தபால் அலுவலகத்தில் செல்போன் திருடியதை ஒப்பு கொண்டார். இதை அடுத்து வில்சனை இரணியல் நீதிபதி முன்பு போலீசார் ஆஜர் படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×