search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோட்டார் புங்கையடி விநாயகர் கோவிலில் 23-ந்தேதி கும்பாபிஷேகம்
    X

    கோட்டார் புங்கையடி விநாயகர் கோவிலில் 23-ந்தேதி கும்பாபிஷேகம்

    • இன்று ஹோம வழிபாட்டுடன் விழா தொடங்கியது.
    • 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில்

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் கோட்டார் இளங்கடை பட்டாரியர் புதுதெருவில் புங்கையடி விநாயகர் ஆலயம் உள்ளது. 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கோவில் கோட்டாறு பட்டாரியர் சமுதாய ருத்ரபதி விநாயகர் செப்பிட்ட சாஸ்தா டிரஸ்ட் மூலம் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது.

    இக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன் படி இன்று (வெள்ளிக்கிழ மை) காலை தொடங்கி 3 நாட்கள் விழா நடைபெறு கிறது. இன்று காலை 7 மணிக்கு மங்கல இசை, நாதஸ்வரம் ஆகியவற்றுடன் விழா தொடங்கி தேவார பண்ணிசை பாடப்பட்டது.

    தொடர்ந்து மகா கணபதி ஹோமம், புண்யாக வாசனம், நவகிரக ஹோமம், கோ பூஜை செய்யப்பட்டு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இரவு 8.30 மணிக்கு நைட் பேர்ட்ஸ் இசைக்குழுவின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கி றது. 2-ம் நாள் நிகழ்ச்சியாக நாளை (22-ந்தேதி) யும் சிறப்பு வழி பாடுகள், அன்னதானம் போன்றவை நடக்கிறது. மாலை 6 மணிக்கு வேதிகார்ச்சனை, விநாயகர் சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டு விமானம், கோபுரம் கலச ஸ்தானம் செய்யப்படுகிறது. இரவு 8.30 மணிக்கு கடலூர் டாக்டர் சிவாஜி கண்ணன் வழங்கும் பல் சுவை நிகழ்ச்சி நடக்கிறது.

    23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழ மை) காலை 6 மணிக்கு விநாயகர் வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு நடைபெறுகிறது. அதன்பிறகு ராஜகோபுரம், முலாலய கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து புங்கையடி விநாயகருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், மகா தீபாராதனை, கோ பூஜை நடக்கிறது.

    அதன் பிறகு சிவானி சிவமித்ரா சகோதரர்களின் தேவார பண்ணிசை நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பகல் 11 மணிக்கு மாபெரும் அன்னதானம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு நாதஸ்வர மேளதாளம் முழங்க விசேஷ அலங்காரத்துடன் மூசிக வாகனத்தில் புங்கையடி விநாயகர் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.

    கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை விழா குழு தலைவர் நாகராஜன், செயலா ளர் முருகப்பெரு மாள், பொருளாளர் ரவி மற்றும் கவுரவ ஆலோச கர்கள், செயற்குழு உறுப்பி னர்கள், நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ள னர்.

    விழாவையொட்டி கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×