search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேசவன்புத்தன்துறை மீனவ கிராமத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணங்கள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
    X

    தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. மனு கொடுத்தபோது எடுத்த படம்.

    கேசவன்புத்தன்துறை மீனவ கிராமத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணங்கள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

    தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. மனு

    கன்னியாகுமரி:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வு மான தளவாய்சுந்தரம் கலெக்டர் அரவிந்தை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மீன்வளத் துறை அலுவலகத்திலிருந்து கடந்த வாரம் வரப் பெற்ற கடிதத்தில் கேசவன் புத்தன் துறை ஊரை சார்ந்த மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையினை அரசிடமிருந்து பெற்று வருகின்ற 25 பேரின் பெயர்களை குறிப்பிட்டு இவர்கள் கடல் தொழில் செய்யாதவர்கள் என்று உண்மைக்கு மாறான தவறான தகவலின் அடிப்ப டையில் மீன்வளத்துறை இந்த கடிதத்தை அனுப்பி யுள்ளதாக அறிய முடிகிறது. இவர்கள் கடல் தொழில் செய்யாதவர்கள் என்பது உண்மைக்கு புறம்பானது, இவர்கள் அனைவரும் கடலை நம்பி வாழ்பவர்கள். கடலுக்கு செல்ல முடியாத நாட்களில் தற்காலிகமாக வேறு சிறு தொழில்களையும் செய்து வருகிறார்கள்.

    கேசவன்புத்தன்துறை ஊரில் கடல் தொழில் செய்து வருகின்ற 13 பேருக்கு அரசால் வழங்கப்படுகின்ற நிவாரணங்கள் அனைத்தும் முறையாக கிடைப்பதில்லை. ஒரு சிலருக்கு குறைந்த நிவாரணம் வழங்கப்படு கிறது. ஆனால் தடைக் கால நிவாரணம் வழங்கப்படவில்லை. மற்றவர்களுக்கு தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது. ஆனால் குறைந்த கால நிவாரணம் கிடைப்பதில்லை. இதனைக் கருத்தில் கொண்டு மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு ஏழை மீன்பிடி தொழிலாளர்களுக்கு அரசால் வழங்கப்படுகின்ற அனைத்து நிவாரணங்களும் முறையாக கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், சாமிதோப்பு ஊராட்சி செட்டிவிளை ஊரில் முந்திரி கிணறு முதல் செட்டிவிளை முத்தாரம்மன் கோவில் வரை உள்ள சாலையினை ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாடு செய்யவும், ஈத்தங்காடு மணக்குடி ரோட்டிலிருந்து பூலாங்குளம் இணைப்புச் சாலையினை ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாடு செய்யவும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யவும் தெரிவிக்கப்

    பட்டுள்ளது.

    அகஸ்தீஸ்வரம் வட்டம், ராஜாக்கமங்கலம் ஒன்றியம், தர்மபுரம் ஊராட்சி, தெற்கு கிராமம், வெள்ளாளர் தெரு பிள்ளையார் கோவில் பின்பகுதியில் 40 வருடத்திற்கு மேலாக பொதுமக்கள் குடியிருந்து வருகிறார்கள். ரியல்எஸ்டேட் தொழிலுக்காக இந்த குடியிருப்புகளை அகற்றி பாதை அமைக்க நீதிமன்ற உத்தரவு பெற்றுள்ளதாக தெரிகிறது. யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லாமல், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் குடியிருப்பதற்கு தகுந்த ஏற்பாடு செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அளித்த மனுவில் கூறியுள்ளார்.

    மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    அப்போது தோவாளை ஊராட்சி ஒன்றி யக்குழு தலைவர் சாந்தினிபகவதியப்பன், ஆரல்வாய்மொழி பேரூ ராட்சி தலைவர் முத்துக் குமார், நாகர்கோவில் மாமன்ற உறுப்பினர் அக் ஷயாகண்ணன், சாமி தோப்பு ஊராட்சி தலைவர் மதிவாணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×