என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
- திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
- பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் தற்போது 70.55 அடியாக உள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிறைந்தன. அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. சிற்றாறு-1, சிற்றாறு-2 மற்றும் மாம் பழத்துறையாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால், அந்த அணைகளுக்கு வந்த தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டது.
இதனால் திற்பரப்பு அருவி, மாவட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் நகர் பகுதிகளில் மழை சற்று குறைந்தது. ஆனால் மலையோர பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று மாலையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. அடையாமடையில் 58 மில்லி மீட்டரும், பெருஞ்சாணி அணை பகுதியில் 42.4 மில்லி மீட்டரும், புத்தன் அணை பகுதியில் 42 மில்லி மீட்டரும் பெய்தது.
இந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்டபெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் தற்போது 70.55 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 581 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 41.10 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 568 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 220 கன அடி தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது.
வழக்கமாக பேச்சிப்பாறை அணையில் 42 அடியும், பெருஞ்சாணி அணையில் 72 அடியும் தண்ணீர் எட்டப்பட்டால், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். தற்போது அந்த அளவை அணைகள் நெருங்கி வருவதால் நீர் மட்டத்தை பொதுப் பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
தொடர்மழையின் கார ணமாக திற்பரப்பு அருவியி லும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கு ஆனந்தமாக நீராட ஏரா ளமானோர் குவிந்துள்ள னர். சனி, ஞாயிறு மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் தமிழகத்தின் பல பகுதிகள் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணி கள் வந்துள்ளதால் திற்ப ரப்பு அருவி, தடாகம், பூங்கா போன்றவை களை கட்டி காணப்பட்டது.மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
அடையாமடை 58, பெருஞ்சாணி 42.4, புத்தன்அணை 42, பாலமோர் 41.4, திற்பரப்பு 37.5, சுருளகோடு 36.4, சிற்றாறு 1-35.2, களியல் 29.6, தக்கலை 26.3, கோழிப்போர்விளை 23.4, சிற்றாறு-2 (சிவலோகம்) 22.4, நாகர்கோவில் 21.4, குழித்துறை 18.8, முள்ளங் கினாவிளை 18.6, பூதப் பாண்டி 15.2, மாம்பழத்து றையாறு 12, முக்கடல் அணை 8.6, ஆணைக்கிடங்கு 8.4, கன்னிமார் 6.2, இரணி யல் 6.2, பேச்சிப்பாறை 4, குளச்சல் 3.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்