search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பகுதியில் ரூ.1 கோடி செலவில் வளர்ச்சி திட்ட பணிகள்
    X

    கன்னியாகுமரியில் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு செய்தபோது எடுத்தபடம். அருகில் மேயர் மகேஷ், கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் பலர் உள்ளனர்.

    கன்னியாகுமரி பகுதியில் ரூ.1 கோடி செலவில் வளர்ச்சி திட்ட பணிகள்

    அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று ஆய்வு

    கன்னியாகுமரி, மார்ச்.14-

    தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ. பெரிய சாமி நேற்று இரவு கார் மூலம் கன்னியா குமரி வந்தார். அங்கு வந்து அவருக்கு குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. மற்றும் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அதன் பிறகு அவர் இரவு கன்னியா குமரியில் தங்கினார். பின்னர் அமைச்சர் ஐ. பெரிய சாமி இன்று காலை கன்னியா குமரி அருகே உள்ள கோவளம் சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் தூய்மை இந்தியா திட்டம்மற்றும் 15 -வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ்சுற்றுலா பயணிகளுக்குவசதியாக நவீன கழிப்பறை கட்டும் பணியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதன் பிறகு ஒற்றையால் விளை அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள், நண்பர்கள் நட்புறவு திட்டத்தின் கீழ் ரூ.68 லட்சத்து25 ஆயிரம் செலவில்4 வகுப்பறை கொண்ட கட்டிடம் கட்டும்பணியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிறகு லீபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆமணக்கன்விளை அரசு தொடக்கப்பள்ளி யில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்து 69 ஆயிரம் செலவில் சத்துணவு திட்ட சமையலறை கட்டும் பணியை பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

    அதைத் தொடர்ந்து சுவாமிதோப்பு பதிசாலையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சத்து 99 ஆயிரம் செலவில் சிமெண்ட் தளம் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது அவருடன் குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட திட்ட அதிகாரி பாபு, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியதி.மு.க. செயலாளர் பாபு, மாநில தி.மு.க. வர்த்தக அணி இணைசெயலாளர்தாமரை பாரதி, கன்னியாகுமரி சிறப்பு நிலைபேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், கொட்டாரம் பேரூர்தி.மு.க. செயலாளர்வைகுண்ட பெருமாள், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர். எஸ்.பார்த்தசாரதி, மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்ப ரதி, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் நீல பாலகிருஷ்ணன், கோவளம் பஞ்சாயத்து தலைவர் ஸ்டெனி, லீபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெயக்குமாரி லீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×