என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகர். அண்ணா பஸ் நிலையத்தில் இரு சக்கர வாகனம் நிறுத்த பார்க்கிங் வசதி
நாகர்கோவில், மார்ச்.15-
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் மேயர் மகேஷ் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பஸ் நிலை யத்தில் உள்ள தபால் நிலையத்தையொட்டி உள்ள பகுதியில் கழிவுநீர் தேங்கி நின்றது. அந்த தண்ணீரை உடனடியாக சீரமைக்க மேயர் மகேஷ் சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இதை தொடர்ந்து கழிவறையை ஆய்வு செய்தார். அப்போது அங்கு பராமரிப்பு இன்றி இருந்தது தெரியவந்தது.
அதை உடனடியாக சரி செய்ய அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.பின்னர் அங்குள்ள கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டார். தின்பண்டங்கள் சரிவர மூடி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஒரு கடையில் தின்பண்டங்கள் தயார் செய்த எண்ணை திறந்த நிலையில் இருந்தது. அதை உடனடியாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் சோதனை நடத்த மேயர் மகேஷ் உத்தர விட்டார். பஸ்நிலையத்தில் குப்பைகள் கிடந்ததை உடனடியாக அகற்றவும் அறிவுறுத்தினார்.
மேலும் அந்த பகுதியில் தற்காலிக செட் அமைத்து ஒருவர் தங்கி இருந்தது தெரிய வந்தது. அந்த செட்டை உடனடியாக அகற்ற மேயர் மகேஷ் உத்தரவிட்டார். சுகாதார பணியாளர்கள் அந்த செட்டை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். மேலும் அங்குள்ள குடிநீர் தொட்டி ஒன்று பழுதாகி மோசமான நிலை யில் இருந்தது. அந்த குடிநீர் தொட்டியை மாற்றிவிட்டு புதிய குடிநீர் தொட்டி அமைக்க மேயர் மகேஷ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வு பணி குறித்து மேயர் மகேஷ் கூறியதாவது:-
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் ஏற்கனவே சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.பழைய இருக்கைகளை அகற்றி விட்டு புதிய இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்பொழுது புதிய இரு கைகளில் பள்ளி மாணவ- மாணவிகள் பொதுமக்கள் அனைவரும் அமர வசதியாக புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.
பஸ் நிலையத்தில் தற்போது கழிவறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு சில கடைகளில் ஷட்டர்கள் இல்லாமல் தார்ப் பாய்களால் மூடப் பட்டு உள்ளது. அந்த கடைகளில் உடனடியாக ஷட்டர் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. லைசென்ஸ் இல்லாமல் செயல்படும் கடைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
சி.சி.டி.வி. கேமராக்கள் முழுவதும் தற்பொழுது செயல்பாட்டில் உள்ளது. பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பஸ் நிலையத்தில் பொது மக்களுக்கு குடிநீர் வசதியை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
பார்க்கிங் வசதி ஏற்படுத்துவது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். எந்த இடத்தில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தினால் இடையூறும் ஏற்படாது என்பதை தெரிந்து பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும். இவ்வாறு கூறினார்.
ஆய்வின் போது ஆணை யாளர் ஆனந்த்மோகன், என்ஜினியர் பாலசுப்பிர மணியன் மண்டல தலைவர் ஜவகர் கவுன்சிலர் ரோசிட்டா ஆகியோர் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்