search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றம்
    X

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றம்

    • அனந்தனார் சானலில் விடப்பட்டுள்ளது.
    • மாவட்டம் முழுவதும் கன்னி பூ சாகுபடி பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரை நம்பியும், குளத்து பாசனத்தை நம்பியும் விவசாயி கள் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தற்பொழுது மாவட்டம் முழுவதும் கன்னி பூ சாகுபடி பணி தீவிரமாக நடந்து வருகிறது. தக்கலை, அருமநல்லூர், பூதப்பாண்டி, தடிக்காரன்கோணம், சுசீந்திரம், தேரூர் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கன்னிபூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை நேற்று திறக்கப்பட்டது.

    அணையிலிருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 50 கன அடியாக குறைக்கப்பட் டுள்ளது. பெருஞ்சாணி அணை திறக்கப்பட்டு அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் அனந்தனார் சானலில் விடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மற்ற சானல்களிலும் தண்ணீர் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அணைகளில் இருந்து விவசாயத்திற்கு தேவை யான அளவு தண்ணீரை வெளியேற்றவும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 40.62 அடி யாக இருந்தது. அணைக்கு 227 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 41.55 அடியாக இருந்தது. அணைக்கு 60 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது.

    சிற்றாறு 1 அணை நீர்மட்டம் 10.56 அடியாகவும், சிற்றாறு 2 அணையின் நீர்மட்டம் 10.66 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 12.90 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 2.30 அடியாகவும் உள்ளது.

    Next Story
    ×