search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அழகிய பாண்டியபுரத்தில் உள்ள கீரன்குளம் ரூ.1 கோடியில் சீரமைப்பு
    X

    அழகிய பாண்டியபுரத்தில் உள்ள கீரன்குளம் ரூ.1 கோடியில் சீரமைப்பு

    • கரைகள் பலப்படுத்தப்பட்டது
    • கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் 12 குளங்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் 12 குளங்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படை யில் அழகிய பாண்டியபுரம் பேரூராட்சியில் கீரன் குளத்தை புதுப்பிக்க ரூ.1 கோடியே 8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். 6 மாத காலத்திற்குள் பணியை முடிக்க வேண்டும் என்ற நிலையில் 1 மாத காலத்திற்கு முன்னதாக 5 மாத காலத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

    பல ஆண்டுகளாக சேறும், சகதிகள் நிரம்பியும், புதர்கள் மண்டி இந்த குளம் காணப்பட்டது. தற்பொழுது சீரமைப்பு பணிகள் முடிவடைந்து புது பொதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. இந்த குளத்தின் கரைப்பகுதிகள் ஏற்கனவே சேதம் அடைந்து காணப்பட்டன.

    தற்போது கரைப்பகு தியில் அனைத்தும் சீரமைக்கப்பட்டு புத்தம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த குளத்தை நம்பி 500 ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன.

    தற்பொழுது குளத்தின் கரைகள் பலப்படுத்தப்பட்டு 10 அடி அகலம் 12 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளதால் குளத்தின் நிலை மாறாது இருப்பதுடன் மழைக்காலத்தில் கரை சேதமடைந்து ஊருக்குள் தண்ணீர் வராத வகையில் தடுப்பு சுவர்கள் ஆர்.சி.சி. முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனால் குளத்திற்கு எவ்வளவு தண்ணீர் வந்தாலும் நீர்க்கசிவு ஏற்படாது. சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்ட மும் பாதுகாக்கப்படும். கோடை காலங்களில் தண்ணீர் வற்றாத வகையில் குளத்தின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த குளத்திற்கு கழிவுநீர் வந்து மாசுபட்ட நிலையில் தற்போது அதுவும் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளுக்கான கடுக்கரை, காட்டுப்புதூர், அழகியபாண்டியபுரம், தெரிசனங்கோப்பு, திடல் உள்ளிட்ட பகுதிகள் பயன்பெறும்.

    குளத்தின் கரையை பல ப்படுத்த சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. பனை மரங்கள் நடப்பட்டு வருகின்றன. மேலும் கொன்றை, வேம்பு போன்ற நிழல் தரும் மரங்களை நடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. குளத்தின் கரையில் நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் 20 அடி அகலம் வரை உள்ளதால் காலை, மாலையில் நடைபயிற்சிக்கு பயன்படுத்தும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இந்த பகுதி பொதுமக்களிடம் இது மிக உயர்ந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    இதேபோல் இந்த சுற்றுவட்டார பகுதியில் உள்ள குளங்களையும் தூர்வாரி ஆழப்படுத்தி தண்ணீர் தேக்கிட நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×