search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோதையாறு வனத்தில் 5 கி.மீட்டர் சுற்றளவில வலம் வரும் அரிசிக்கொம்பன் யானை
    X

    கோதையாறு வனத்தில் 5 கி.மீட்டர் சுற்றளவில வலம் வரும் அரிசிக்கொம்பன் யானை

    • கடல் மட்டத்தில் இருந்து 1340 மீட்டர் உயரத்தில் இருப்பதாக வனத்துறை தகவல்
    • திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை வனச்சரகத்திற்குட்பட்ட அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கேரளா மற்றும் தமிழகத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த அரிசிக்கொம்பன் யானை, வனத்துறையினரின் தீவிர முயற்சிக்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

    பின்னர் கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்ட அரிசிக்கொம்பன், திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை வனச்சரகத்திற்குட்பட்ட அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டது.

    அதன்பிறகு காட்டுக்குள் சென்ற அரிசிக்கொம்பன், குடியிருப்பு பகுதிக்கு வரக்கூடும் என திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மலைவாழ் மக்கள் அச்சம் அடைந்தனர். இதற்காக அவர்கள் பல போராட்டங்களிலும் ஈடுபட்டனர். ஆனால் அரிசிக் கொம்பன் யானை, காட்டை விட்டு வெளியே வர வாய்ப்புகள் இல்லை என வனத்துறையினர் உறுதிபட தெரிவித்தனர்.

    அதன் காதில் அணி விக்கப்பட்டுள்ள ரேடியோ காலர் தரும் சிக்னல் மூலம், யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக வனத்துறையினர் கூறினர். அப்பர் கோதையாறு பகுதியில் அரிசிக் கொம்பன் யானைக்கு தேவையான உணவு, குடிநீர் கிடைத்து வருவதால் அந்தப் பகுதியிலேயே யானை சுற்றி வருவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக வனத்துறையினர் கூறுகையில், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் விடப்பட்டுள்ள அரிசிக் கொம்பன் யானை, கடந்த 13 நாட்களாக அப்பர் கோதையாறு வனத்தில் சுமார் 5 கி.மீட்டர் சுற்றள விலேயே சுற்றி வருகிறது. அந்தப் பகுதியில் உள்ள தாவர உணவுகளை உண்டு விட்டு, நல்ல ஓய்வும் எடுத்து வருகிறது. எனவே இனி அரிசிக்கொம்பன் யானை, குடியிருப்பு பகுதிக்கு வரும் என்ற அச்சம் தேவையில்லை.

    இருப்பினும் அதன் நட மாட்டத்தை களக்காடு மற்றும் கன்னியாகுமரி கோட்டங்களுக்கு உட்பட்ட வன கால்நடை அலுவ லர்கள், வனச்சரக அலுவலர்கள், வனவர்கள் என பல்வேறு தரப்பினர் அடங்கிய குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதில் அரிசிக்கொம்பன் யானை நல்ல ஆரோக்கி யத்துடன் இருப்பதும், காட்டுப்பகுதியில் உணவு உண்டு வருவதும் ரேடியோ காலர் சிக்னல்கள் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது கடல் மட்டத்தில் இருந்து 1340 கி.மீட்டர் மேல் உள்ள கோதையாறு ஆற்றின் பிறப்பிடம் அருகே உள்ள வனப்பகுதியில் தான் அரிசிக்கொம்பன் உள்ளது என்றனர்.

    Next Story
    ×