search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் இன்று அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    நாகர்கோவிலில் இன்று அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
    • குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க . சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கன்னியாகுமரி:

    குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க . சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. குமரி மாவட்டத்தில் சானல் தூர் வாரப்படாததால் கடைமடை வரை தண்ணீர் செல்லாமல் இருப்பதை கண்டித்தும், மின்சார கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்தும், தடிக்காரன் கோணத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கடை கட்டுவதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    குளம் தூர்வாருதலில் முறைகேடு, சாலை பணிகளில் முறைகேடு உள்ளிட்டவற்றுக்கும் ஆர்ப்பாட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் சானல்கள் தூர்வாரப்ப டாமல் உள்ளதால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. இதனால் நெல் பயிர்கள் கருகும் நிலையில் இருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் 40 அல்லது 40 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால் தான் ராதாபுரம் தாலுகாவுக்கு தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் தற்போது 38 அடி தான் தண்ணீர் உள்ளது. எனினும் ராதாபுரம் தாலுகாவுக்கு தண்ணீர் திறந்து இருக்கிறார்கள். இதனால் குமரி மாவட்ட மக்கள் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் சாலைகள் அமைப்பதற்கு 18 சதவீதம் கமிஷன் கேட்பதாக கான்ட்ராக்டர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இப்படி கேட்கும் போது எப்படி தரமான சாலைகள் அமைக்க முடியும்.

    தி.மு.க ஆட்சி ஊழல் ஆட்சியாக உள்ளது. இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் தெற்கு பகுதி செயலாளர் முருகேஸ்வரன் வர வேற்றார். அமைப்புச் செயலாளர் கே.டி.பச்சைமால், மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மாணவரணி செயலாளர் மனோகரன், மேற்கு மாவட்ட அவைத் தலைவர் சிவகுற்றாலம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கிருஷ்ண தாஸ், மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சிவ செல்வராஜன், வக்கீல் பிரிவு துணை செயலாளர் பரமேஸ்வரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியண்ட் தாஸ், சக்கீர் உசேன், குளச்சல் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ், குளச்சல் சட்டமன்ற தொகுதி முன்னாள் செயலாளர் ஆறுமுகராஜா, மாவட்ட மாணவரணி முன்னாள் செயலாளர் ரவிந்திரவர்சன், தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன், ஜெயலலிதா பேரவை செயலாளர் ராஜாராம், ஆரல்வாய் மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், மாவட்ட இணைச்செயலாளர் சாந்தினி பகவதியப்பன், துணைச் செயலாளர் பார்வதி, மாவட்ட பொருளாளர் திலக், பகுதி செயலாளர்கள் ஜெய கோபால், ஜெவின் விசு, ஒன்றிய செயலாளர்கள் ஜெசீம், ஜீன்ஸ், ஜெயசுதர்சன், பொன் சுந்தரநாத், முன்னாள் நகரச் செயலாளர் சந்துரு, மாநகராட்சி கவுன்சிலர்கள் அக் ஷயா கண்ணன், கோபாலசுப்பிரமணியன், சேகர், அனிதா சுகுமாரன், பொதுக்குழு உறுப்பினர் சகாயராஜ் மற்றும் நிர்வாகிகள் ரபீக், வெங்கடேசன், ரெயிலடி மாதவன், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கவுன்சிலர் ஸ்ரீலிஜா நன்றி கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை களை வலி யுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவரும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×